பக்கம்:மதன கல்யாணி-3.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 மதன கல்யாணி புரண்டு தூரத்தில் போவதும் தண்ணிருக்குள் மறைந்து வெளிப்படு வதுமாக மிகவும் உலப்பப்பட்ட வண்ணமிருக்க, அதைப் பிடித்துக் கொள்வதற்காக மதனகோபாலன் மார்பளவு தண்ணி இருந்த இடம் வரையில் போய் அலைகளால் மோதப்பட்டு அங்கு மிங்கும் உருண்டு புரண்டு நெடுநேரம் தத்தளித்துக் கடைசியாகக் கிழவியின் உடம்பைப் பிடித்துக் கொண்டான். கிழவி அடிபட்டு மூர்ச்சித்துக் கிடந்த நிலைமையில் தண்ணில் எறியப்பட்டவள் ஆதலால், தண்ணிரும் குளிர் காற்றும் உடம்பில் மோதவே, அவளது உணர்வு தெளிந்ததானாலும், தண்ணிரில் முழுகிய போதெல்லாம் வாய் மூக்கு காது முதலியவைகளினால் தண்ணிர் உள்ளே நுழைந்ததாகையால் அவள் மூச்சுவிட மாட்டாமல் தத்தளித்து வாயை மெதுவாகத் திறப்பதும் மூடுவதும் தண்ணிரை நிரம்பவும் குடிப்பதுமாகத் தனது உயிரை விடுத்துக் கொண்டிருந் தாள். அந்த நிலைமையில் அவளைப் பிடித்துக் கொண்ட மதனகோபாலன், அவள் உயிரோடிருக்கிறாள் என்பதைக் கண்டு மிகுந்த களிப்பும் நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டு, அவளது முகத்தை மாத்திரம் தண்ணிருக்கு வெளியே பிடித்தவண்ணம் கரையை நோக்கி வர முயன்றான். ஆனால் அடிக்கடி மேன்மேலும் வந்து வந்து சுருண்டு சுருண்டு மோதிய அலைகளினிடையில் மதனகோபாலன் அகப்பட்டுத் தண்ணிருக்குள் ஆழ்ந்து போனாலும், கிழவியை மாத்திரம் உயரத் தூக்கியபடியே தண்ணிருக்குள் இருந்து பாய்ந்து பாய்ந்து வெளிப்பட்டவனாய்க் கரையை நோக்கி சிறிது தூரம் வருவதும், அத்ற்கு இரண்டு மடங்கு தூரம் பின்னால் இழுக்கப்படுவதுமாகத் தத்தளித்துக் கொண்டிருந் தான். அவன் மிகவும் இளைத்து பலவீனம் அடைந்திருந்தவன் ஆகையால், அவனது கண்கள் அடிக்கடி இருண்டன. சிரம் சுழன்றது. அறிவு மயங்கியது. கைகால்கள் எல்லாம் சோர்ந்து கட்டிலடங்காமல் போயின. அப்படி இருந்தாலும், அந்தக் கிழவியின் உயிரை எப்படியாகிலும் தான் காப்பாற்ற வேண்டும் என்ற ஜீவகாருண்யத்தினால் துண்டப்பட்டவனாய், அவன் தனது அற்ப பலத்தை நன்றாக வற்புறுத்தி உபயோகித்து, அந்த அலைகளினிடையில் கிடந்து கால் நாழிகை நேரம் வரையில் தவித்துக் கொண்டிருந்தவனாய்ப் பெரும் பாடுபட்டு அந்தக்