பக்கம்:மதன கல்யாணி-3.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257 அருகமற்றவனாகி விட்டேன். என்ன செய்கிறது. இனி பிழைகளை எல்லாம் மன்னித்துக் கொள்ளும்படி கெஞ்சி மன்றாடிக் கேட்டு திக்கு நோக்கி தெண்டனிடும். பணிவுள்ள குமாரன், துரைராஜா - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த ஜெமீந்தார் மிகுந்த விசனமும் கலக்கமும் கொள்ளலானார். துரைராஜா என்பவன் இயற்கையில் ஈவிரக்கம், தயாளம், நற்குணம் முதலியவை வாய்ந்தவன் என்பதையும், ஆனால், அடக்குவோர் இல்லாமை யால், அதன் கூடாவொழுக்கங்களில் பிரவேசித்துக் கெட்டலை கிறான் என்பதையும், அவர் பன்முறை கேள்வியுற்றிருந்தார். அவன் தமது முகத்தில் விழிக்க வெட்கித் தற்கொலை புரிந்து கொள்ள நினைப்பதிலிருந்து, இன்னமும் அவனிடத்தில், கண்ணியமும், சுயமரியாதையும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது; ஆகையால், அவனைத் தாம் எப்படியும் தேடிப்பிடித்துக் கொணர்ந்து ஒரு கலியாணத்தைச் செய்து வைத்து நல்வழிப்படுத்தி விடலாம் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அதுவும் நிற்க, தமது தம்பியின் மகனைத் தாம் கவனியாமல் விட்டதனால் அவன் தற்கொலை புரிந்து கொண்டான் என்று உலகத்தார் தன்னைத் துற்றுவார்கள் என்ற அச்சமும் தோன்றியது. ஆகையால், அவர் உடனே அவனை எப்படியும் திருப்பி அழைத்து வந்துவிட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவராய் எழுந்து அங்கே இருந்த சமாசாரப் பத்திரிகைகளை ஆராய்ச்சி செய்தார். அவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த கப்பல் புறப்படும் தேதி மணி முதலியவற்றைப் பார்த்தார். முந்திய நாள் தனுஷ்கோடியிலிருந்து எந்தக் கப்பலும் புறப்படவில்லை என்பது தெரிந்தது. அன்றைய தினம், மாலை மூன்று மணிக்குக் கொளும்புக்கு ஒரு கப்பல் புறப்படும் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். ஆகவே துரைராஜா தனுஷ்கோடியிலே தான் இருக்க வேண்டும் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு உடனே அவசரத் தந்தியொன்றை எழுதி, அதை தனுஷ்கோடிப் போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அனுப்பி வைத்தார். அதில் துரைராஜாவினது அங்க மச்ச அடை