பக்கம்:மதன கல்யாணி-3.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


258 மதன கல்யாணி யாளங்களை எல்லாம் கண்டு, அந்த யெளவனப் புருஷன் பெருத்த பொருளைத் திருடிக்கொண்டு அக்கரை தேசத்திற்குப் போக முயல்வதால் அவனைப் பிடித்து வைத்திருந்தால், மறுநாள் தாம் நேரில் அங்கே வருவதாக அந்தத் தந்தியில் எழுதி அனுப்பி விட்டார். அவனைப் பிடித்த உடனே மறுதந்தி அனுப்பும்படி பணமும் கட்டி தமது விலாசத்தையும் எழுதியனுப்பிவிட்டு பதில் தந்தியின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். அவரது நிலைமை அப்படியிருக்க, மற்றவர்களும் வெவ்வேறு வகையில் தங்களது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். முதல் நாள் இரவில் கல்யாணியம்மாள் தனது இமைகளை மூடவே இல்லை. நெடுங்காலத்திற்கு முன்னர் தான் இழந்த புத்திரனைத் திரும்பவும் அடைந்ததையும், தன்மீது எவ்விதக் குற்றமும் இல்லையென்று ஜட்ஜி துரை தீர்மானித்து விட்டதையும், தங்களுக்கெல்லாம் பரம உபகாரியாக இருந்த கிருஷ்ணாபுரம் ஜெமீன்தார் அவரது மக்களை அடைந்ததையும், கடைசியில் தனது மூத்த புத்திரி அவரது குமாரனிடத்திலேயே போய்ச் சேர்ந்து அவ்வளவு அபாரமான குபேர சம்பத்துக்கும் எஜமானியானதையும் நினைத்து நினைத்து கல்யாணியம்மாள் பிரம்மாநந்த சுகத்தில் ஆழ்ந்து மிதந்து இரவெல்லாம் அதே உற்சாகமும், பூரிப்பும், மனவெழுச்சியும் அடைந்து தனது சயனத்தில் படுத்திருந்தாள். அதுபோலவே மதனகோபாலன் இன்னொரு சயன அறையில் படுத்து அதே விஷயங்களை நினைத்து நினைத்துப் பேராநந்த நிலைமையில் இருந்ததன்றி, தனது மனத்தைக் கொள்ளை கொண்ட நற்குண வதியான கண்மணியம்மாள் தனக்கு மனைவியாகும் விஷயம் பகிரங்கமாக்கப்பட்டு, மீனாகூஜியம்மாள், கல்யாணியம்மாள் முதலியோரால் அங்கீகரிக்கப்பட்டதையும் நினைத்து நிகரற்ற சுவர்க்க போகம் அனுபவிப்பவன் போலப் பூரித்து மெய்ம்மறந்து, கண்மணியம்மாளது இனிய சுந்தர வடிவத்தையே இரவு முழுதும் சொப்பனத்தில் கண்ட வண்ணம் சயனித்திருந்தான். ஆனால், அவன் தனது மூத்த தங்கையான துரைஸானியம்மாளை அதுவரையில் பார்க்கவில்லை ஆதலால், அந்தக் குறை மாத்திரம் அவனது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. தனது தாயான