பக்கம்:மதன கல்யாணி-3.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 கல்யாணியம்மாள் துரைஸானியின் மீது கொண்டிருந்த கோபத்தில் அவளைப் பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ என்ற சந்தேகமும் இருந்து வந்தது. சுந்தரம் பிள்ளை அங்கப்ப நாயக்கன் தெருவில் வைத்திருந்த வீட்டில் இருந்த துரைஸானியம்மாளை அன்றைய காலையில் அழைத்து வருவதென்று கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஏற்பாடு செய்திருந்தார். ஆகையால், தான் அதிகாலையில் எழுந்து தனது தாயின் சயனக் கிரகத்துக்குப் போய்த் தனது தங்கையான துரைஸானியம்மாளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் படி கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு சயனித்திருந்த மதனகோபாலன் அதிகாலையில் எழுந்து, தனது காலைக்கடன் களை முடித்துக் கொள்ள, பொழுதும் நன்றாக விடிந்தது. தனது தாய் அப்போது படுக்கையை விட்டு எழுந்திருப்பாள் என்று நினைத்து அவன் அங்கே சென்றான்; கல்யாணியம்மாள் பிரத்தியேகமான ஒரு சயனக் கிரகத்தில் படுத்திருந்தாள். அதன் வாசற்கதவு மூடப்பட்டிருந்தது. அதைக் கண்ட மதனகோபாலன் தனது தாய் ஒருவேளை துக்கத்திலிருந்து விழிக்கவில்லையோ என்று சந்தேகித்தவனாய் இரண்டொரு நிமிஷ நேரம் அவ்விடத் திலேயே தயங்கி நிற்க, உட்புறத்தில் மனிதர் பேசிய குரலோசை கேட்டது. தனது தாய் மிகவும் ஆத்திரமாகப் பேசியதும் தெரிந்தது. அவ்வாறு, தனது தாய்க்கு ஆத்திரம் உண்டானதைக் காண, அவனது மனம் பதறியது. தனது தாயினிடத்தில் அப்படி யார் தவறாக நடந்து கொண்டவர் என்பதை அறிய ஆவல் கொண்ட மதனகோபாலன், உள்ளே என்ன பேசப்படுகிறதென்பதை கவனித்தான். அப்போது கல்யாணியம்மாள், "அடி பொன்னி நீ செய்த காரியத்தினால் என்னுடைய ஆயிசு காலமெல்லாம் அந்த அம்பட்ட நாய்க்குப் பணம் கொடுத்துக் கொடுத்துத்தான் என்னுடைய குடியே முழுகிப் போய்விட்டதே. அவர்கள் தாயும், மகனும் சேர்ந்து இவ்வளவு காலம் என்னைப் படுத்தி வைத்தபாடு ஈசுவரனுக்கே சம்மதமில்லாமல், கடைசியில் இரண்டு பேரும் மீளாமல் தொலைந்து போனார்களே. மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போல, நீ இப்போது வந்து இன்னம் ஐயாயிரம் பதினாயிரம் கொட்டிக் கொடுத்து உன்னைப் போலீசார் ஒன்றும் செய்யாமல் மீட்டுவிடச் சொல்லுகிறாயே. பணமென்ன