பக்கம்:மதன கல்யாணி-3.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


260 மதன கல்யாணி எங்கள் வீட்டுக் கொல்லையில் காய்த்தா தொங்குகிறது. அதெல்லாம் ஒன்றும் கொடுக்க முடியாது. நீயும் ஜெயிலுக்குப் போய்ச் சேர். துஷ்ட சகவாசம் பிரான சங்கடம் என்றபடி, நீங்கள் எல்லாரும் இருப்பதனாலே தான் எனக்கு இப்படிப்பட்ட சங்கடங்கள் எல்லாம் வருகின்றன" என்று அதட்டிக் கூறினாள். அதைக் கேட்ட பொன்னம்மாள் கல்யாணியம்மாளது பாதத் தடியில் வீழ்ந்து, "தாயே! ஒங்கிளுக்காவ நான் இத்தெனெ காலமா எம்பிட்டோ பாடுபட்டவளாச்சே! இந்தக் கடெசிக்காலத்துலெ நீங்க என்னெ இப்பிடிக் கைவிட்டுபுட்டா, நான் என்ன செய்யறது! போலீசுக்காரன் கிட்ட என்னெக் காட்டிக்குடுக்காம நீங்களே கொண்ணுப்புடுங்க. கச்சேரியிலெ சரிச்சி தொரெகூட என்னெப் பத்தி நல்லா எளுதியிருக்காங்களே! ஒங்க மனசு மாத்தரம் எரங்கலியா! ஒங்களோடே சொந்தப்புள்ளெ நேத்து சொன்னத்தெ நீங்க கவனிக்கலியா! அந்த அம்பட்டச்சியோடெ மவனெ நான் இஞ்செ கொண்டாந்து வைக்காமெயிருந்தா நம்ப ராசாங்கமே போயிருக்குமே. அதெயாச்சும் ரோசனே பண்ணுங்க அம்மா! நீங்க என்னெப் பொறத்தியிலெ காட்டிக்குடுக்காமே நீங்களே கொண்ணு போட்டுடுங்க!" என்றாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிறிது நேரம் பேசாமலிருந்து, "நீ அப்படிச் செய்தது போனாலும் போகட்டும் என்றால், நீ செய்த இன்னொரு காரியத்தை மாத்திரம் நான் மறக்கவே மாட்டேன். வெள்ளைக்காரி போட்டுக் கொள்வதற்கு வேண்டிய உடைகளை எல்லாம், ரென்பென்னெட்டு கம்பெனியிலிருந்து வாங்கிக் கொடுக்கும்படியாக நீ கேட்டபோதே, நான் அதைப் பற்றி ஆட்சே பித்தேன். அந்த உடைகளை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் என்பதைக் கடைசி வரையில் என்னிடத்தில் நீ சொல்லாமலே இருந்து என் கழுத்தை அறுத்துவிட்டாய். யாரோ ஒரு தேவடியாளுக்கு அந்த உடைகளை எல்லாம் போட்டு நீ அனுப்பியிருக்க, அந்த துரைராஜா என்மேல் சந்தேகப்பட்டு இங்கே வந்து என்னை எப்படிப்பட்ட அவமானத்துக்கு ஆளாக்கி னான். இப்போது அந்த உடைகள் என்னுடைய பிள்ளையினிடத் திலும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினிடத்திலும் இருக்கின்றன. நான்