பக்கம்:மதன கல்யாணி-3.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 261 தான் அப்படி வேஷம் போட்டுக் கொண்டு வந்தவள் என்று அவர்கள் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை என்று நான் ஆயிரந்தரம் சொன்னாலும் அவர்களுடைய மனம் நம்புமா? இந்த வெட்கக் கேடான விஷயத்தை முதலில் நான் எப்படி வாயில்வைத்து அவர்களிடத்தில் பேசுகிறது! என்னுடைய குழந்தையின் மனசில் என்னுடைய நடத்தையைப் பற்றி இந்தக் கெட்ட அபிப்பிராயம் இருந்து கொண்டே இருக்குமே. அதற்கு நான் இடங்கொடுக்கலாமா? விலக்க முடியாத இந்தத் துன்பத்தை எனக்கு உண்டாக்கி வைத்தவள் நீயல்லவா! ஆகையால், அந்த அதிக்கிரமச் செய்கைக்காகவாகிலும், உன்னை நான் கவனியாமல் போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிடப் போகிறேன்" என்றாள். உடனே பொன்னம்மாள் முன்னிலும் அதிகமாக இறைஞ்சிய குரலாக, "அம்மணி! வெள்ளைக்கார உடுப்பெல்லாம் நீங்க போட்டுக்கினதல்ல இங்கற சங்கதியெ சொலபத்துலெ நாம்ப ருசுப் படுத்தலாமே. அன்னெக்கி அந்த உடுப்புங்க கம்பெனியிலெ யிருந்து ஒங்கவிட்ட வந்து, நீங்க எங்கிட்டக் குடுத்தீங்களே. அப்ப, அதுலெயிருந்த ரவுக்கையெ எடுத்து நீங்க வேடிக்கையாய்ப் போட்டுக்கினு பாத்தீங்களெ ஒங்க களுத்துப் பெரிசா இருந்துச்சு. அந்த ரவுக்கையோடெ களுத்து சின்னதாயிருந்திச்சு. ஒங்களோடெ களுத்துலெ அதெமாட்ட முடியாமெப் போச்சே. அந்த சங்கதி ஒங்கிளுக்கு நெனெப்பில்லையா! அந்த அளவெ வச்சிக்கினே நீங்க அப்படிச் செய்யல்லேயின்னு சொல்லி நாம்ப நல்லா ருசுப் படுத்தலாமே" என்றாள். அவள் சொன்ன சமயோசிதமான யோசனையைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த மகிழ்ச்சியும் குதுகலமுமடைந்து, "பலே பலே பேஷ்! பொன்னம்மா! நீ சுத்தமாக எழுத்து வாசனை அறியாதவளாக இருந்தும், உன்னுடைய சாமார்த்தியமும் புத்தி கூர்மையும் யாருக்கும் வராது. எழுந்திரு எழுந்திரு பதினாயிர மல்ல லட்சமல்ல எவ்வளவு வணம் வேண்டுமானாலும் செலவு செய்து நான் உன்னை மீட்கிறேன். இப்போது தான் என் மனம் குளிர்ந்து உண்மையில் சந்தோஷமடைகிறது. நானும் சரியான