பக்கம்:மதன கல்யாணி-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மதன கல்யாணி மனுவி என்று இனிமேல் நான் என் அருமை மகனுடைய முகத் திலும் பெரியவருடைய முகத்திலும் விழிக்கலாம். பொன்னம்மா! உன்னுடைய புத்தி விசேஷத்தை நான் நிரம்பவும் மெச்சுகிறேன்! உன்னை நான் எப்போதும் கைவிட மாட்டேன்" என்று உறுதி கூறினாள். உடனே பொன்னம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தவளாய் எழுந்து நிற்க, கல்யாணியம்மாள், "சரி; என்னுடைய குழந்தை இந்நேரம் எழுந்து, என்னைப் பார்க்க ஆவல் கொண்டிருப்பான். நேற்று ராத்திரி அவனைவிட்டுப் பிரிந்தது எனக்கு ஒரு யுகம் போல இருக்கிறது. நீயும் வா; அவன் இருக்கும் இடத்துக்குப் போவோம்" என்றாள். அது வரையில் கதவிற்கு வெளியில் இருந்தபடி அந்த சம்பாஷணை முழுதையும் ஒரு வார்த்தைகூட விடாமல் கேட்டிருந்த மதனகோபாலன் அவ்விடத்தை விட்டுத் தனது சயனக்கிரகத்தை நோக்கி விரை வாகப் போய்விட்டான். அவன் அதுகாறும் அந்த வெள்ளைக்காரி உடைகள் விஷயமாகத் தனது தாயின்மீது ஒருவித அருவருப்பைக் கொண்டிருந்தான் ஆனாலும், அதை மறக்க முயன்று கொண் டிருந்தான். ஆனால், தனது தாய் அந்த விஷயத்திலும் நிஸ்டிகளங்க மானவள் என்பதை உணரவே, அவனது மனதில் உண்டான பெருமைக்கும், ஆனந்தத்திற்கும், பூரிப்பிற்கும் எல்லையில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த விஷயத்தில் தனது தாய் சுத்தமானவள் என்பதை கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருக்கும் தான் சொல்லி அவரது அருவருப்பையும் விலக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, அவன் தனது சயன அறைக்குள் போனவுடனே, அங்கே மேஜையின் மீது மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளைக்காரி உடைகளை எடுத்து அவன் அங்கேயிருந்த ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தப் போன சமயத்தில், கல்யாணியம்மாள், "தம்பி! அது என்ன மூட்டை? அவ்வளவு ஜாக்கிரதையாக இரும்புப் பெட்டியில் வைக்கிறாய்!" என்று கேட்டுக் கொண்டே அந்த அறைக்குள் வந்து நுழைந்தாள். தனது தாய் வந்ததைக் கண்டு திடுக்கிட்டு ஒருவிதக் கிலேசம் அடைந்த மதனகோபாலன் தான் என்ன மறுமொழி சொல்வ தென்பதை உணராது சிறிது நேரம் தயங்கினான். அவன் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/265&oldid=853410" இலிருந்து மீள்விக்கப்பட்டது