பக்கம்:மதன கல்யாணி-3.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264 மதன கல்யாணி தாயும் அவ்விடத்தில் இருக்கக் கண்டு, பயந்து நடுங்கி சடக்கென்று தன்னை அடக்கிக் கொண்டு, மதனகோபாலனைப் பார்த்து ஏதோ சைகை செய்தாள். அதைக் கண்ட கல்யாணியம்மாள், "என்ன கண்ணு! ஏதோ சந்தோஷ சங்கதி சொல்ல வந்தவள் போல அண்ணனைக் கூப்பிட்டுக் கொண்டு ஓடி வந்தாய்! சடக்கென்று நிறுத்திவிட்டாயே! எனக்குத் தெரியாமல் அண்ணனுக்கு மாத்திரம் தெரியக்கூடிய சந்தோஷ சங்கதி அப்படி என்ன இருக்கிறது? பரவாயில்லை. அண்ணன் கோபித்துக் கொள்ள மாட்டான். சங்கதியைச் சொல்" என்று நயமாகவும் குதூகலமாகவும் கூறினாள். அதைக் கேட்ட கோமளவல்லியம்மாள் விஷயத்தைச் சொல்லவும் மாட்டாமல், மறைக்கவும் மாட்டாமல் பரம சங்கடப்பட்டு, திருட்டு விழி விழித்து மதனகோபாலனது உதவியை நாடுகிறவள் போல, அவனது முகத்தை நோக்க, அதைக் கண்ட கல்யாணியம்மாள் நிரம்பவும் வியப்புற்றுப் புன்னகை செய்த முகத்தினளாய் மதனகோபாலனை நோக்கி, "என்ன தம்பி உங்களுக்குள் ஏதோ ரகசிய சங்கதி இருக்கிறது போலிருக்கிறதே! நான் வெளியே போய் விட்டு அப்புறம் வரட்டுமா?" என்று நயமாகக் கேட்க, உடனே மதனகோபாலனும் ஒருவாறு கிலேசமுற்றுத் தத்தளித்துத் தயங்கித் தனது தாயினிடத்தில் அஞ்சுகிறவன் போலக் காட்டி, "உங்களுக்குத் தெரியாத சங்கதி என்ன இருக்கிறது! வேறொன்றுமில்லை. நம்முடைய துரைஸானியம்மாள் வந்திருக்கிறாளாம்; அதைத் தெரிவிக்கத்தான் தங்கைச்சி ஓடிவந்தது. நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்று எனக்கும் பயம்; தங்கைச்சிக்கும் பயம். ஆகையால், முதலில் துரைஸானியம்மாளை இங்கே அழைத்து வந்து வைத்துக் கொண்டு உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, அதன் பிறகு அவளை உங்களிடம் அழைத்துவர நினைத்தோம். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. துரை ஸ்ானியம்மாளுடைய முகத்துக்காக பார்க்காவிட்டாலும், நம்முடைய பெரியவருடைய முகத்துக்காக நீங்கள் அவளை கூடிமிக்க வேண்டும். அவள் இனி பெரியவருடைய மருமகள் அல்லவா? அவர்களுடைய மருமகளிடத்தில் நீங்கள் இப்படிப் பட்ட அருவருப்பையும் கோபத்தையும் நெடுக வைத்திருப்பது அவருக்குச் சம்மதமாக இராது. அதுவும் தவிர, இந்த இரண்டு