பக்கம்:மதன கல்யாணி-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 கிழவியைக் கரைக்குக் கொணர்ந்தான். அலைகள் மதில் வரையில் வந்து போய்க் கொண்டிருந்தன. ஆகையால், அவ்விடத்தில் அவன் அவளை வைக்கக்கூடாமல் இருந்தது. அப்படி வைத்தாலும் ஒருகால் மைனரும் பாலாம்பாளும் மறுபடியும் வந்து அவருக்கு ஏதேனும் துன்பமிழைப்பரோ என்ற நினைவும் மதனகோபாலனது மனதில் தோன்றியது. ஆகையால், அவன் அந்தக் கிழவியின் கட்டுகளைக்கூட அவிழ்க்காமல் அவளைத் துக்கித் தன் வலது தோளின் மேல் சார்த்திக் கொண்டவனாய்க் கடலோரமாக நடந்து, தென்னஞ்சோலைக்கப்பால் சென்றான். தண்ணில் அவனை இழுத்துக் கொண்டு வருவது சுலபமாக இருந்தமையால், அவன் தனது பலவீனமான நிலைமையில் ஏதோ ஜீவகாருண்யத்தைக் கருதி அவளை அலைகளுக்கு வெளியில் சுலபமாகக் கொண்டு வந்தான். ஆனால் அவன் அலைகளுக்கு நடுவில் கிடந்து நெடுநேரம் வரையில் போராடி முற்றிலும் சேர்ந்திருந்தவனாகை யாலும், அவனது உடைகளும், அவளது சேலையும் தொப்பலாக நனைந்து ஏராளமான தண்ணிரைத் தேக்கிக் கொண்டிருந்தமை யாலும், அவனது கேவலமான நிலைமையில், அவளைத் துணிகளின் சுமையோடு சேர்த்துத் துக்கிக் கொண்டு மணலின் மீது நடப்பது மகா கடினமாகவும், அவனால் சிறிதும் சாத்தியம் இல்லாததாகவும் இருந்தது. அவனது தேகம் தட்டித் தடுமாறித் தள்ளாடியது. கால்கள் கட்டினில் நில்லாமல் பின்னி கண்கள் இருண்டன; உணர்வு பிறழ்ந்து கொண்டே இருந்தது. தென்னஞ் சோலைக்கப்பால் இருந்த மணல் பரப்பை அடைந்தவுடன் அதற்கு மேலும் செல்லமாட்டாமல், அவர் மூர்ச்சித்து அவளை கீழே போட்டுக் கொண்டு அப்படியே மணலில் சாய்ந்துவிட்டான். அவ்வாறு சாய்ந்தவன் உணர்வற்று அசைவற்று மூச்சுப் பேச்சற்று வீழ்ந்து கிடந்தான். கருப்பாயியும் தனது கட்டுகளோடு சோர்ந்து நித்திரையில் இருப்பவள் போலச் சற்று தூரத்தில் படுத்திருந்தால், அவ்வாறு ஒரு நாழிகை நேரம் கழிந்தது. கையில் லாந்தர்களோடு சில வேலைக்காரர்களை அழைத்துக் கொண்டு, "மதனகோபாலா! மதனகோபாலா!" என்று கூவிய வண்ணம் அவனைத் தேடிக் கொண்டு வந்த கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தார் அவ்விடத்தில் தண்ணில் நனைந்த கட்டைகள்போல இருந்த அவ்விருவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/27&oldid=853415" இலிருந்து மீள்விக்கப்பட்டது