பக்கம்:மதன கல்யாணி-3.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267 எச்சரித்து விடுவோம். நீங்கள் ராமலிங்கபுரத்தாருக்குக் கடிதம் எழுதியபடி நான்தான் மூத்த பெண் என்று சொல்லி என்னை அவர்களுடைய வீட்டில் கட்டிக் கொடுத்து விடுங்கள்; அவர்களும் என்னைப் பார்த்திருக்கிறார்கள் ஆகையால், அதைப்பற்றி சந்தேகப் படமாட்டார்கள். சின்னப் பெண்ணை கிருஷ்ணாபுரம் ஜெமீந் தாருடைய பிள்ளைக்குக் கொடுக்க இப்போதுதான் முடிவான தென்று நாம் இனி அவர்களுக்குச் சொல்லிவிடலாம். இப்படி நாம் செய்தால், துரைஸ்ானியம்மாளைப் பற்றிய சங்கதி எல்லாம் மறந்து போகும். நான் கடைசி வரையில் மூத்தவன் என்றே சொல்லிக் கொண்டு இருந்து விடுகிறேன். எனக்கும் அக்காளுக்கும் வயசிலும், தோற்றத்திலும் அவ்வளவு அதிகமான வித்தியாசம் இல்லையாகையால், அவர்கள் சந்தேகிக்கப் போகிறதில்லை" என்றாள். அந்த யோசனையைக் கேட்ட கல்யாணியம்மாள் கட்டிலடங்காத மகிழ்ச்சியும், ஆவேசமும், ஆனந்தமும் அடைந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கோமளவல்லியம்மாளை ஒரு குழந்தை போல வாரி எடுத்துக் கட்டித் தழுவி அவளது கன்னங்களில் வாய் ஓயாமல் முத்தமிட்டு, "ஆ! என் கண்ணே! என் முத்தே! என் தங்கமே! உன்னைப் போன்ற பெண்ணும் மதனகோபாலனைப் போன்ற பிள்ளையும் இரண்டு உலகங்கள் போல எனக்கிருக்க, இனி எனக்கு இந்திரன் சந்திரன் கூட இணையாக மாட்டார் என்றே எண்ணுகிறேன். கண்மணியே! நீ தீர்க்க சுமங்கலியாக இருந்து வாழக்கடவை!" என்று கூறி மனதார வாழ்த்தி அவளைவிட்டு, மதனகோபாலனை நோக்கி, "சரி குழந்தை சொன்னது நல்ல முதல்தரமான யோசனை: அது போலவே நாம் நடத்திடுவோம். ஆனால், துரைஸானியை மாத்திரம் நான் இப்போது பார்க்கமாட்டேன். இன்னம் ஒருமாச காலமாவது கழிந்து, என் மனசில் உள்ள அருவருப்பு நீங்கின. பிறகு நான் அவளைப் பார்க்கிறேன். நேரமாகிறது; நான் பெரியவரைப் பார்க்க வேண்டும்" என்று கூறி விடை பெற்றுக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியில் போக, அந்த அறையின் இன்னொரு வாசற்படிக் கப்பால் நின்று, அங்கே நடந்த சம்பாஷணைகளை எல்லாம் கேட்டிருந்த துரைஸானியம்மாள் மிகுந்த ஆவலும்