பக்கம்:மதன கல்யாணி-3.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 மதன கல்யாணி பொருட்களையும் நெருப்பில் போட்டுக் கொளுத்தச் செய்து, போலிஸ் கமிஷனரிடத்தில் போய் ரகசியமாகப் பேசி, சில போலீசாரை அழைத்து வந்து வீட்டைச் சோதனைப் போடச் செய்து சந்தேகமான பொருட்கள் ஒன்றுமில்லை என எழுதச் செய்து அவர்கள் இருவரையும் தப்பவைத்தார். அது நிற்க, துரை ஸ்ானியம்மாளது விஷயத்தில் கல்யாணியம்மாளுக்கிருந்த கோபத்தையும் ஜெமீந்தார் தணித்து, கலியான தினம் வரையில், துரைஸானியம்மாள் மாரமங்கலத்து பங்களாவிலேயே இருக்கும் படி செய்தார். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது ஏற்பாடுகள் இப்படி இருக்க, கல்யாணியம்மாள் தனது சமஸ்தானத்தை ஹைகோர்ட்டின் தீர்மானப்படி மதனகோபாலனது பேரிலேயே மாற்ற வேண்டும் என்று கலெக்டர் துரைக்கு மனுக்கொடுத்து, மகா கீர்த்தி வாய்ந்த பாரிஸ்டர் குரோட்டன் துரையை அமர்த்தி வாதாடச் செய்து, சமஸ்தானமும், சகலமான சொத்துக்களும் மதனகோபாலன் மீது பதிவாகும்படி செய்தாள். இன்னமும் ஹைகோர்ட்டுத் தீர்மானத் தில் பொன்னம்மாளின் மீது போலீசார் கிரிமினல் நடவடிக்கை எடுத்துக் கொள்ள ஜட்ஜி துரை அனுமதி கொடுத்திருந்த விஷயத் திலும் கல்யாணியம்மாள் அபரிமிதமான பொருளைச் செலவு செய்து, பாரிஸ்டர் குரோட்டனைக் கொண்டே போலீசாரிடத்தில் வாதாடச் செய்து, அந்தக் கிழவியை மீட்கச் செய்தாள். அவ்வாறு சகலமான வழக்குகளும் தீர்ந்து, அவர்கள் எல்லோரும் எவ்விதக் கவலையுமின்றி சந்தோஷமாக இருக்கத்தக்க நிலைமையை அடைய சரியாக மூன்றுமாத காலமாயிற்று; நான்காவது மாத ஆரம்பத்தில் மனோகர விலாசம் என்ற அந்த அரண்மனை இந்திர விமானம் போல அலங்கரிக்கப்பட்டு பிரமாதமான கலியாணக் கோலத்தோடு ஜ்வலித்தது. சுமார் லட்சம் ஜனங்களுக்கு மேல் கூடியிருக்கத் தகுந்த பெருத்த கொட்டகைப் பந்தல், இந்த உலகத்தில் உள்ளதும் இல்லாததுமான எல்லா அலங்காரங்களும் நிறைந்து, ஏதேனும் ஒரு பொருளைப் பார்த்தோர், சலிக்காமல், அதையே பார்த்துக் கொண்டிருக்கும்படியான அதியற்புத வனப்பு வாய்ந்து, சுவர்க்கலோகம் போல விளங்கியது. சக்கரவட்டமாக