பக்கம்:மதன கல்யாணி-3.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 271 அமைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டகை பந்தலிற்குள் ஐந்திடங்களில் ஐந்து முத்துப் பந்தல்களும் கலியான மேடைகளும் காணப்பட்டன. அந்த ஐந்து முத்துப் பந்தல்களின் கீழ், ஐந்து ஜதை யெளவனப் புருஷர்களும், யெளவன மடவன்னங்களும் அடிமுதல் முடிவரையில் வைரங்களும் ஜரிகைகளுமே நிறைந்து ஜெகஜ் ஜோதியாக மின்ன, தேவலோகத்து ஸதிபதிகள் போலத் தேஜோமயமாக உட்கார்ந்திருந்தனர். லட்சக்கணக்கான சீமான்களும் சீமாட்டிகளும் வந்துகூடி நெருங்கி இருந்தனர். பத்து ஜதை மேளங்களும், இருபது ஜதை பாண்டுகளும் அண்டம் செவிடு படும்படி தேவதுந்துபி போல ஜாம் ஜாமென்று முழங்குகின்றன. ஆயிரக்கணக்கில் வந்து கூடிய அந்தணர் யாவரும் வேதகீதம் பாடி ஐந்திடங்களிலும் ஒரே முகூர்த்தத்தில் திருமாங்கலிய தாரணம் செய்து வைக்கிறார்கள். கல்யாணியம்மாளும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும் தாம் எந்தப் பந்தலில் நிற்பதென்று அறியாமல், எல்லா இடங்களிலும் இருந்து ஆனந்த வெறி கொண்டு தலைகால் தெரியாமல் அங்குமிங்கும் ஒடி அலைகிறார்கள். ஒரு பந்தலில் துரைஸானியம்மாளும், மோகனரங்கனும் உட்கார்ந்து, இந்த உலகத்தில் தங்களைப் போல இரண்டு தரம் கலியாணம் செய்து கொண்டவர்களும், பரம ஏழைகளாய் இருப்பதாக எண்ணிக் காதலித்துத் தங்களுக்குத் தெரியாமலே லட்சாதிபதிகளானவர்களும் யாராகிலும் உண்டா என்று கேட்பவர் போல மிகுந்த மமதையும் குதுகலமும் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இன்னொரு பந்தலில் ராஜாயி அம்மாளும் சுந்தர பாண்டிய தேவரும், ஒரு மண்டலேசுவரனும், அவனது பட்ட மகிஷியும் போல மகா கம்பீரமாக உட்கார்ந்து, சாமர்த்தியத்திலும், சாதுர்யத்திலும், பிறரை எத்துவதிலும் எங்களைப் போல யாராகிலும் இருப்பார்களா என்று கேட்பவர் போல, கருடப் பார்வை பார்த்தவராக உட்கார்ந்திருந் திருந்தனர். இன்னொரு பந்தலில் கோமளவல்லியம்மாளும் ராமலிங்கபுரம் ஜெமீந்தாரது மூத்த குமாரரும் மிகுந்த நாணமும் வெட்கமும் அடைந்தவர்களாய் உட்கார்ந்து, உத்தமமான ஸதிபதிகள் என்பதற்கு உதாரணமாக விளங்கி இருந்தனர். நான்காவது பந்தலில் துரைராஜாவும் மோகனாங்கியும் உட்கார்ந் திருந்தனர். ஆனால் அவர்களுள் மணவாளன், மணவாட்டியின்