272 மதன கல்யாணி
அற்புத சிருஷ்டிக்குத் தகுந்தவன் அல்லவானாலும், குருட்டு யோகத்தினால், அவனுக்கு அந்தப் புண்யவதி வந்து வாய்த்தாள் என்று எல்லோரும் சொல்லத் தகுந்த ஜதையாக அவர்கள் விளங்கினர். மிகுதியிருந்த ஐந்தாவது முத்துப் பந்தலிலே தான் நமது கதாநாயகனான மதனகோபாலனும், அவனது தர்ம பத்தினியான செளபாக்கியவதி கண்மணியம்மாளும், மகா விஷ்ணுவும், லகஷ்மிதேவியும் போலவும், பூரீ ராமனும் ஜானகி தேவியும் போலவும், எவ்விதக் குற்றம் கூறுவதற்கும் இடமின்றி, சகலமான உத்தம குணங்களிற்கும் இருப்பிடமென எல்லோரும் புகழத்தக்கபடி இனிது வீற்றிருக்க, நல்ல சுப முகூர்த்தத்தில் ஐந்து பந்தல்களிலும் திருமாங்கலிய தாரணம் நிறைவேறியது.
கல்யாணியம்மாளும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும், ஸதிபதி களான பதின்மரும் சாயுஜ்ய பதவியில் இருப்பவர் போல நித்யாநந்த சுகமதுபவித்துப் பூரித்துப் புளகாங்கிதமடைந்து இப்போதும் கலியான்ங்களை நடத்திக் கொண்டே அமோகமாக இருக்கிறார்கள்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/275
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
