பக்கம்:மதன கல்யாணி-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 நிலைமையிலிருந்த மதனகோபாலன் தண்ணில் வீழ்ந்து அவ்வளவு அதிகமாக உலப்பப்பட்டிருப்பதனால், அவனது தேகஸ்திதி எப்படியாகுமோ என்ற கவலையும் எழுந்து நிரம்பவும் வதைக்கத் தொடங்கியது; அந்தக் கிழவியின் கைகால்களை எல்லாம் அவ்வாறு கட்டி ஈவிரக்கமின்றி அவ்வளவு கொடிய மனதோடு போட வேண்டிய காரணம் என்னவாக இருக்கும் என்று ஜெமீந்தார் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டவராகச் செல்ல, யாவரும் கால் நாழிகை நேரத்தில் புதிய பங்களவை அடைந்தனர். அவ்விடத்தில் மதனகோபாலனும், கிழவியும் வசதியான இரண்டு படுக்கைகளில் விடப்பட்டனர். உடனே டாக்டர் ஒருவர் வருவிக்கப்பட்டார். அவர்களுக்கு கோதுமைத் தவிட்டு ஒற்றிடம் கொடுக்கப்பட்டதோடு, உடம்பில், சூடுண்டாவதன் பொருட்டு, பலவகையான தைலங்களும் பூசப்பட்டன. மறுபடியும் மதன கோபாலனுக்கு நேர்ந்த விபத்தை உணர்ந்த மோகனாங்கி பணிவிடைகளைச் செய்தவளாய் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தனள. அவ்வாறு அவர்கள் இருவருக்கும் எண்ணிறந்த சிகிச்சைகள் செய்யப்படவே, அவர்களது உணர்வு சிறுகச்சிறுகத் திரும்பிவந்து கொண்டிருந்தது. அந்த இரவு முழுதும், அந்த பங்களாவில் இருந்தோர் எல்லோரும் தூங்காமலும், ஆகாராதிகளை நாடாமலும், மெய் வருத்தம் பாராமலும் இருந்து அரும்பாடுபட்டு அவர்கள் இருவரையும் நல்ல நிலைமைக்குக் கொணர்ந்தனர். மறுநாட் காலையில், அவர்கள் இருவரும் முற்றிலும் தெளி வடைந்தவராக கண்களை விழித்தனர். முதல் நாள் மாலையில் நேர்ந்த சம்பவமும், அதன் பிறகு பின்னிரவில் தமக்குச் செய்யப் பட்ட சிகிச்சைகளும் அவர்களுக்கு நினைவிருந்தனவேயன்றி, இடையில் தாம் அவ்வாறு அந்த பங்களாவிற்குக் கொண்டுவரப் பட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது; அம்பட்டக் கருப்பாயிக்கு அது கனவு போலவே இருந்தது. மைனரும் பாலாம்பாளும் தன்னை அடிக்கிற காலத்தில் தான் அதைத் தாங்கமாட்டாமல் மயங்கி அரைவுணர்வோடு கீழே வீழ்ந்திருந்த காலத்தில், அவர்கள் இருவரும் தம் கைகால்களை எல்லாம் கட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/29&oldid=853425" இலிருந்து மீள்விக்கப்பட்டது