பக்கம்:மதன கல்யாணி-3.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 மதன கல்யாணி இருக்குமா? அல்லது, அவர்கள் அடித்ததைப் பொறுக்க மாட்டாமல் ஆத்திரத்தினால் சொன்ன வெறுந் தூஷணையாக இருக்குமா? அப்படி நிஜமாக இருந்தால், அவனைக் கல்யாணியம் மாள் தம்முடைய பிள்ளை என்று பாவித்து உலகத்தாரும் அப்படியே நினைக்கும்படி செய்திருப்பதன் காரணம் என்ன? இது நிரம்பவும் அபூர்வமான சங்கதியாக இருக்கிறதே!" என்றான். ஜெமீந்தார் ஒருவித மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தவராய், "இதைக் கேட்ட முதல் எனக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கல்யாணியம்மாள் சாதாரணமான மனுவியல்ல. அவள் உன் விஷயத்தில் எவ்விதமான சாகசமும் தந்திரமும் செய்தாள் பார்த்தாய் அல்லவா! அதன் பிறகு நீ பிராது கொடுக்காமல் இருப்பதற்காக உன்னைத் தொலைக்க வேண்டி வெள்ளைக்காரி போலப் போய் துரைராஜாவை ஏவிவிட்டவள் அல்லவா! இந்தக் காரியங்களை எல்லாம் வேறே எந்தப் பெண்பிள்ளையாவது துணிந்து செய்வாளா? ஒருகாலுமில்லை. இந்த அம்பட்டக் கிழவி சொல்லுவது நிஜமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவ்வளவு தூரம் கட்டுப்பாடாக இவள் சொல்ல வேண்டிய காரணமில்லை. ஏதோ பத்திரத்தை இவள் அபகரித்துக் கொண்டு போய் கல்யாணியம்மாளிடத்தில் கொடுத்து விட்டாள் என்பதும், அது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பத்திரம் என்பதும் தெரிகின்றன. அதை எல்லாம் பார்த்தால் இவள் கல்யாணியம்மாளுக்கு மிகவும் அந்தரங்கமான வேலைக்காரி என்பது தெரிகிறது. சுமாா பதினெட்டு வருஷ காலத்துக்கு முன் ஒரு வதந்தி உண்டாயிற்று. அப்போது தான் கல்யாணியம்மாளுடைய புருஷன் இறந்து போனான். எனக்கு துரைராஜாவென்ற தம்பி மகன் இருப்பது போல அவருக்குச் சின்ன துரை என்ற ஓர் அயோக்கியன் தம்பி மகனாக இருந்தான். அவன் இந்த ஜெமீனெல்லாம் தனக்கு வந்து சேர வேண்டும் என்று யாரோ ஆள்களைவிட்டு, கல்யாணியம் மாளுடைய ஆண்பிள்ளையைத் திருடிக் கொண்டு வரும்படி செய்து விட்டான். அந்த விசனத்தைத் தாங்க மாட்டாமலேயே கிழவர் இறந்து போய்விட்டார். அப்போது கல்யாணியம்மாள, அந்த சின்னதுரை வசித்துக் கொண்டிருந்த இடமான இந்த ஊருக்கு வந்து சொற்பகாலம் இருந்து காணாமற் போன குழந்தையைக்