பக்கம்:மதன கல்யாணி-3.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 கண்டு பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார் என்று ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நானும் அதைப் பற்றி அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது இந்தக் கிழவி சொல்வதைப் பார்த்தால், கல்யாணியம்மாள், இவளுடைய பிள்ளையை விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு தன்னுடைய பிள்ளை என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிவிட்டாள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. காணாமற் போன பிள்ளையை அவள் கொண்டு வந்துவிட்டாள் என்பதைக் கேட்டவுடனே அந்த சின்னதுரை உடனே தற்கொலை செய்து கொண்டு விட்டானாம். இந்தச் சங்கதி நமக்குத் தெரிய நேர்ந்தது ஈசுவர சங்கற்பமேயன்றி வேறல்ல. நாம் இவளிடத்தில் கேட்டு உண்மையான வரலாறு களை எல்லாம் அறிந்து கொள்வோம். இவள் இன்னம் ஒரு வாரத் துக்குள் அவனை ஜெமீந்தார் பதவியிலிருந்து விலக்கப் போவ தாகச் சொன்னாள் என்றாயே? அதை எப்படிச் செய்வாள் என்பதையும் நாம் கேட்போம். அந்தப் பத்திரம் சமீபத்தில் ரிஜிஸ்டரானதாகவே தெரிகிறது. அதன் விவரத்தையும் இவளிடத்தில் கேட்டுக் கொண்டு சப் ரிஜிஸ்டிராரது கச்சேரியி லிருந்து அதற்கு ஒரு நகல் வாங்கிக் கொள்வோம். நான் கல்யாணி யம்மாள பேரில் செய்யப்போகும் வியாஜ்ஜியத்துக்கு இதெல் லாம் மிகவும் அனுகூலமாக இருக்கும்" என்றார். அந்த விவரங்களை எல்லாம் கேட்ட மதனகோபாலன் அளவிறந்த வியப்பும் திகைப்பும் அடைந்தவனாய், "இந்த விஷயம் புதுமையிலும் புதுமையாக இருக்கிறதே! உண்மை யிலேயே, தம்முடைய குழந்தை திரும்பாமலே போயிருந்தாலும், இப்படிப்பட்ட பெருத்த சமஸ்தானத்தின் எஜமானியாக இருக்கும் ஒரு ஸ்திரீ ஒரு குறவனுக்கும் அம்பட்டச்சிக்கும் பிறந்த குழந்தையை வாங்கித் தமது பிள்ளையென்று சொல்லி வைத்துக் கொண்டு சீராட்டி வளத்து அவனுக்குப் பணிந்து நடக்க மனம் ஒப்புமா என்பது தான் நம்பத்தகாததாக இருக்கிறது" என்றான். ஜெமீந்தார், "அப்படி செய்யாவிட்டால், சமஸ்தானமும் சொத்து களும் செல்வாக்கும் அதிகாரமும் மற்ற எல்லா மேன்மையும் சின்ன துரையைச் சேர்ந்துவிடும் அல்லவா, அப்புறம் கல்யாணி யம்மாளுக்குச் சொற்பத் தொகை தானே ஜீவனாம்சமாகக்