பக்கம்:மதன கல்யாணி-3.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 மதன கல்யாணி கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்கிறது. அதற்காகத் தான் அவள் இப்படிப்பட்ட படுமோசத்தில் இறங்கி இருக்கிறாள். ஆனால் அது இவ்வளவு காலந்தான் நீடித்திருக்க ாசுவரனுக்குச் சம்மதம் போலிருக்கிறது. இனிமேல் இந்த விஷயம் எப்படியும் வெளியாகிவிடும். இந்த அம்பட்டப் பையன் இனி மேல் அடைப்பப் பையையாவது கன்னக்கோலையாவது எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் அவனுடைய தலை எழுத்து" என்றார். மதனகோபாலன், "அப்படியானால் இந்த சமஸ்தானத்தின் கதி என்னவாகிறது? இப்படி ஆள்மாறாட்டம் செய்த குற்றம் எப்படி முடியும்?" என்றான். ஜெமீந்தார், "இந்தக் கல்யாணியம்மாள் தான் இருக்கிற வரையில் சமஸ்தானத்தை அனுபவித்துக் கொள்ளலாம், அதன் பிறகு இது தாயாதிகளைச் சேர்ந்துவிடும். ஆனால் இப்படி ஆள்மாறாட்டம் செய்த குற்றத்தை கவர்ன்மெண்டார் சும்மா விடமாட்டார்கள். ஏனென்றால், கலெக்டர் துரை விசாரணை செய்து உண்மையான வார்சுதார் பேரில் சமஸ்தானத்தை மாற்றுவார்கள். இந்த நாவிதப் பையன் தான் தன்னுடைய மகன் என்று கல்யாணியம்மாள் கலெக்டருக்கு முன் தப்பாக எழுதி வைத்திருப்பதால் அவளுக்குக் கடுமையான தண்டனை ஏற்படுவது நிக்சயம்" என்றார். அதைக் கேட்ட மதனகோபாலனது மனதும் கண்களும் கலங்கின; அவன் கல்யாணியம்மாளது விஷயத்தில் மிகுந்த இரக்கம் கொண்டவனாய், "ஐயோ! பாவம்! அந்த அம்மாளுக்கு என்னென்ன உபத்திரவங்கள் எல்லாம் உண்டாகின்றன! அடாடா! அந்த அம்மாள் என் விஷயமாகச் செய்துள்ள காரியங் களைப் பற்றி மேல்நடவடிக்கை நடத்தி அந்த அம்மாளைக் கச்சேரிக்கு இழுக்க எனக்குக் கொஞ்சமும் மனமில்லை. நீங்களோ அவர்களைச் சும்மா விட்டுவிடக் கூடியதென்கிறீர்கள். எப்படியாவது நீங்கள் பெரிய மனசு காட்டி அந்த அம்மாளை மன்னித்து இவ்வளவோடு விட்டுவிடுங்கள். ஏதோ பெண் புத்தியினால் தெரியாத்தனமாகச் செய்திருக்க வேண்டும். நாமேன் அவர்களுடைய வாயில் விழவேண்டும். ஆனால் உங்களுக்குத் தெரியாததற்கு நான் என்ன சொல்லக் கிடக்கிறது" என்று மனப்பூர்வமான உருக்கத்தோடு