பக்கம்:மதன கல்யாணி-3.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 கூறினான். அந்தச் சமயத்தில் அம்பட்டக் கருப்பாயி தனது கண்களை விழித்துக் கொண்டு அவர்களைப் பார்த்தாள் ஆகையால், ஜெமீந்தார் மதனகோபாலனுக்கு எவ்வித மறுமொழி யும் கூறாமல், அவளது பக்கம் திரும்பி, "கிழவி உனக்கு உடம்பும் மனமும் சரியான நிலைமைக்கு வரவில்லை போலிருக்கிறது. இன்று முழுதும் பேசாமல் படுத்துக் கொண்டிரு. சாயுங்காலத்திற்குள், எல்லாம் சரியாகப் போய்விடும்" என்று அன்பாக மொழிந்தார். அதைக் கேட்ட கருப்பாயி தனது படுக்கையில் சடக்கென்று எழுந்து உட்கார்ந்து, "இல்லீங்க. ஒங்க தயவினாலே என்னோடே ஒடம்பு சரியாப் போச்சுதுங்க. இனிமேலெ பயமில்லிங்க, இப்ப நான் கண்ணெ மூடிக்கினதெப் பாத்து, நான் துங்கறேனுன்னு எண்ணிக்கிட்டீங்களா இல்லெ இல்லெ; சொம்மா கண்ணே மூடிப் படுத்திருந்தேன், நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை எல்லாம் நானும் கேட்டுக்கினுதான் இருந்தேன். சத்தியமாச் சொல்றேன். அந்தப் பையன் எம் வவுத்துலே பொறந்த மவந்தானுங்க; அவனை இம்பிட்டுப் பெரிய ஜெமீந்தாரு ஆக்கினவ நாந்தானுங்க; அவன் அந்தத் தேவடியாநாரி பாலாம்பாளோடெ சேந்து அளிஞ்சு பூட்றான்னு நாங்க அவனுக்கு நல்லது நெனச்சா, அவுனும் அவுளுமாச் சேந்துக்கினு, நேத்து என்னெ அடிச்சு குத்துசிரும் கொலெ உசிருமாப் பண்ணி கையையும் காலையும் கட்டி சமுத்திரத்துலெ எறிஞ்சுட்டாங்களே! என்னமோ அந்தக் கடவுளு தான் இந்த மவராசாவெ அந்தச் சமயத்திலே அங்ங்னே கொண்டாந்து விட்டு, என்னெக் காப்பாத்தி வுட்டாரு; எங்கப்பன், எனக்கு உசிரு குடுத்த மவராசா, இதோ படுத்திருக்காரே இவுரு தான் என்னெக் காப்பாத்தின புண்ணியவான். கடவுளு கிருவையாலெ இவுரு சானாகாலத்துக்கு சொகமா இருந்து பெத்துப் பெருகி வாளனுங்க. இவங்களுக்கு மேலே நீங்க தயாள மனசுள்ளவங்களா இருக்கிறீங்க. நீங்க இவங்களுக்கு என்னா ஒறவு மொறெ ஆவணுமோ தெரியலிங்க. நீங்க ர்ெண்டு பேரும் மவராச்சாக்களா ஆயிரங்காலம் சொகமா இருக்கணும்; நான் போறெனுங்க, நேத்து நடந்ததெ நெனெக்க நெனெக்க எம் ஒடம்பு பதறுதுங்க, நேத்தொடெ அந்த நாயிக்கும் எனக்கும் தீந்து in.co.III-3