பக்கம்:மதன கல்யாணி-3.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 மதன கல்யாணி வேண்டும். அவன் அந்தப் பிள்ளையை யாரிடத்தில் விட்டான் என்பது தெரியவேண்டும். அது தெரிகிறதாகவே வைத்துக் கொள்வோம். இத்தனை வருஷகாலமாக மைனர் என்று பாவிக்கப்பட்டு வரும் இவன் உண்மையான பிள்ளையல்ல என்பதும் உன்னால் கொண்டு வரப்படும் இன்னொருவன் தான் மைனர் என்பதும் ருஜூவாக வேண்டும். நீ மாத்திரம் சொன்னால் அதை யார் நம்புவார்கள்? உன்னைப் பைத்தியக்காரி என்று சொல்லுவார்களேயன்றி, அதை எவரும் நிஜமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகையால், நீ உண்மையான பிள்ளையைக் கண்டுபிடிப்பது மாத்திரம் போதாது; அவன் உண்மையான மகன் என்பதை ருஜூப்படுத்த வேண்டும்" என்றார். அதைக் கேட்ட கருப்பாயி, "அந்த தகிரியம் இல்லாமலா நான் இம்பிட்டுத் துணிச்சலாப் பேசறேன். கல்யாணியம்மாளோடெ புள்ளெயத் திருடிக் கொண்டாந்தவன் கட்டையன் கொறவ னுன்னு ஒருத்தன் இருக்கறான், ஆனா அவன் அந்தப் புள்ளெயெ வேற ஒருத்தன் கிட்ட ஆயிரம் ருவாக்கி வித்துப்பூட்டானாம். அவன் வித்தபோது, அதெல வாங்கினவன் யாரு அவன் எங்கே இருக்கறான், அவன் பேரு எல்லாத்தெயும், அவனே ஒரு துண்டுக் கடுதாசியிலெ எளுதிக் குடுத்தானாம். ஆனாக் கட்டையன் கொறவன் அதெப் படிக்கவுமில்லெ அவனுக்கு அந்த வெவரமே ஒண்ணுந் தெரியாது. அந்தத் துண்டுக் கடுதாசியெ அவன் எங்கிட்டக் குடுத்துப் பத்தரமா வைக்கச் சொன்னான். நானு அதெ எடுத்துப் பாத்தா நெசம் கண்டுபுடிச்சுக்கல்லாம். அந்தப் பையன் ஒடம்புலே ஒரு அடெயாளம் இருக்குது. அந்த அடெயாளத்தெப் பேலே எம்மவன் ஒடம்புலே ஒரு டாக்குட்டரு திராவகத்தெ ஊத்தி சுட்டு அடெயாளம் பண்ணிக் குடுத்தாரு. அது இல்லாமெ, இன்னும் எத்தினியோ சங்கதியெல்லாம் இருக்குது. ஒங்ககிடட நானு இனிமே எதெயும் மறைக்க மாட்டேன். கல்யாணியம் மாளோடெ சங்கதி எல்லாம் உள்ளபடியே ஒங்ககிட்ட சொல்லிப்புட் றேன்; அந்தத் துண்டுக் கடுதாசியெயும் கொண்டாந்து குடுக்கிறேன். நான் ஒருத்தி இல்லாமெப் போனா இந்த நெசமெல்லாம் மறைஞ்சே பூடும்" என்று பேசிக் கொண்டே இருக்கையில் அங்கே ஒரு விபரீதமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த பங்களாவில் அவர்கள்