பக்கம்:மதன கல்யாணி-3.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 உட்கார்ந்திருந்த மகாலின் வெளிப்பக்கத்து வாசற்படிக்குப் பக்கமாகப் போடப்பட்டிருந்த கட்டிலில் கருப்பாயி படுத்திருந்தாள்; அவள் தனது ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், அந்த வாசலுக்கு உப்புறத்திலிருந்து யாரோ ஒரு மனிதன் திடீரென்று விசையாக உள்ளே நுழைந்து, தனது கையிலிருந்த பீச்சாங்கத்தியால் கருப்பாயியினது மார்பைப் பார்த்து ஒரே குத்தாகக் குத்திவிட்டு வெளியில் ஓடிவிட்டான். அதே நிமிஷத்தில் கருப்பாயி, "ஐயோ! அப்பா குத்திப்புட்டானே!" என்று வீரிட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு கட்டிலின் மேல் விழுந்தாள். பொறித் தடடியதைப் போல நடந்த அந்த நிகழ்ச்சியை கண்ட ஜெமீந்தார், "விடாதே பிடி பிடி ஆள் அதோ ஒடுகிறான்" என்று கூவிக் கொண்டே துரத்த, அவருக்குப் பின்னால் நாலைந்து வேலைக் காரர்களும் ஒடினார்கள். கருப்பாயியைக் குத்திவிட்டு ஓடியவன் பங்களாவை விட்டு ராஜபாட்டைக்குப் போய் அங்கே இருந்து சமுத்திரத்தின் மணல்பரப்பை நோக்கி ஒட, இவர்கள் எல்லோரும் பெருங் கூச்சலிட்டுக் கொண்டு துரத்த, அப்போது அங்கே வந்த போலீஸ் ஜெவானும் அவர்களோடு சேர்ந்து துரத்தலானான். அவ்வாறு எல்லோரும் துரத்தி முன்னால் ஒடின மனிதனைப் பிடித்துக் கொண்டனர். இரத்தம் கசிந்த கத்தியொன்று அவனது மடியில் இருந்தது. போலீஸ் ஜெவான் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு மின்சார விளக்கண்டை நிறுத்த, ஜெமீந்தார் உடனே அவனது அடையாளத்தைக் கண்டு சகிக்க ஒண்ணாத வியப்பும் பிரமிப்பும் அடைந்தவராய், "அடடா மாரமங்கலம் மைனரல்லவா இவன்! என்ன துர்ப்புத்தி இது பெரிய இடத்தின் பெயரையெல்லாம் அநியாயமாகக் கெடுத்துவிட்டாயே! இது யார் செய்யக்கூடிய காரியம்! காலத்துக்கேற்ற புத்தி உண்டாகும் என்பது சரியாகப் போய்விட்டதே!" என்றார். அவ்வாறு கையும் மெய்யுமாகப் பிடிப்பட்ட மாரமங்கலம் மைனர் மருள மருள விழித்துக் கொண்டு நிற்க, அவனது கைகால்கள் எல்லாம் வெடவெடவென நடுங்குகின்றன. ★ ★ ★