பக்கம்:மதன கல்யாணி-3.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 மதன கல்யாணி வண்ணம் உட்கார்ந்திருந்தனர். ஆனால், துரைஸானியம் மாளை அவர்கள் அபகரித்துக் கொண்டு போகாமல், தாங்கள் காப்பாற்றிக் கொண்டதொன்றே போதும் என்று அவர்கள் நினைத்துத் தங்களுக்குள் மிகுந்த திருப்தியடைந்தவர்களாக இருந்தனர். கல்யாணியம்மாள் அடிக்கடி தனது பார்வையை துரைஸானி யம்மாள் இருந்த பக்கம் செலுத்தி, அவள் எப்படி இருக்கிறாள் என்று கவனித்தாள். மற்ற இருவரும் எவ்வளவிற் கெவ்வளவு சிந்தனையில் ஆழ்ந்து துயரமே வடிவாகவும் பரிதாபகரமான நிலைமையினில் இருந்தார்களோ அவ்வளவிற்கவ்வளவு துரைஸானியம்மாள் நெறியற்றவளாய், நிரம்பவும் அலட்சியமாகத் தனது சோபாவில் சாய்ந்தவளாய் ஏதோ ஒரு விஷயத்தில் தனது நினைவைச் செலுத்திக் கொண்டிருப்பவளாகக் காணப்பட்டாள். மற்றவர் இருவரும் அவ்வாறு விசனமுற்றுத் தங்களை அலட்டிக் கொள்வதைப் பற்றி, அவள் தமக்குள் புரளியாகவும் ஏளனமாக வும் மதிக்கிறாள் என்பதை அவளது முகத்தோற்றம் காண்பித்தது; ஆனால் கடிகாரம் 8-45-க்கு மேல் ஆனதைப் பார்த்து மற்ற இருவரும், தாங்கள் ஜெயித்து விட்டோம் என்று மிகுந்த பெருமை பாராட்டிக் கொள்பவர் போல அடிக்கடி துரைஸானியம்மாளது முகத்தை நோக்கினர். அவளோ அவர்களது கொடிய பார்வையை ஒரு சிறிதும் மதியாதவளாய் தனது முகத்தை அவர்களது பக்கம் திருப்பாமல் உட்கார்ந்திருந்தாள். தாங்கள் எவ்வளவு பாதுகாப் பான இடத்திலிருந்தாலும் இன்றிரவு முழுதும் தான் மாத்திரம் துங்கக் கூடாதென்ற உறுதியைக் கொண்டிருந்த கல்யாணி யம்மாள், தனது நாற்காலியைத் தனது குமாரிகளிருந்த சோபாக் களின் பக்கம் திருப்பி வைத்து, அவர்களைப் பார்த்த வண்ணம் அதன்மேல் சாய்ந்து கொண்டிருந்த அவர் கதவுகள் எல்லாம் நன்றாக மூடப் பெற்ற அந்த ஹாலில் மிகவும் பிரகாசமான இரண்டு மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது நெருப்பை அள்ளி வீசுவது போல அவர்களது தேகங்களில் சுருக்கென்று உரைத்துக் கொண்டிருந்தாலும், அந்த விளக்குகள், மின்சார சக்திக் குறைவினால் அடிக்கடி அணைந்தணைந்து இரண்டொரு நிமிஷம் நின்று மறுபடியும் பற்றி எரிந்தது அவர்களுக்கு ஒருவித ஆறுதலாக இருந்தது.