பக்கம்:மதன கல்யாணி-3.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43 கல்யாணியம்மாளும, கோமளவல்லியும் அடிக்கடி கடிகாரத்தை யும், அணைந்து போய் எரியும் விளக்கையும் பார்த்தவர்களாக இருந்தாலும் அவர்களது கவனம் முழுதும் தங்களது பங்களா விலேயே சென்று லயித்துப் போயிருந்தது. கடிகாரத்தின் முட்கள் 8-45-க்கு மேல் நகரத் தொடங்கிய போது மறுபடியும் மின்சார விளக்குகள் அணைந்து போய்விட்டன. அதற்கு முன் நடந்தது போல, அவைகள் இரண்டொரு நிமிஷத்தில் மறுபடியும் பற்றிக் கொள்ளும் என்று அவர்கள் இருவரும் நினைத்திருந்தார்கள். அப்படி சுமார் 10-நிமிஷ நேரம் வரையில் அவர்கள் பொறுத்துப் பார்த்தனர். அவைகள் திரும்பவும் பிரகாசிக்கவில்லை. கல்யாணி யம்மாளது மனதில் மிகுந்த கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விட்டன. ஒருநாளும் இல்லாமல் மின்சார விளக்குகள் அன்றைய தினம் அவ்வாறு மோசம் செய்வதை நினைத்து அவள் மிகவும் வருந்தினவளாய்த் தனது ஆசனத்தை விட்டெழுந்து வாசற் கதவண்டை போய் நின்று கொண்டு ஜெவான் கோபாலா என்று கூப்பிட, அவன் "ஏன் அம்மணி என்ன வேண்டும்?" என்றான். "மின்சார விளக்குகள் நின்று போய்விட்டமையால் எங்களுக்கு மெழுகுவர்த்தி விளக்காகிலும் சீமையெண்ணெய் விளக்காகிலும் ஒன்று கொணர்ந்து கொடுத்தால் அது உதவுயாக இருக்கும்" என்று கல்யாணியம்மாள் கூற, அந்தச் சேவகன், ஆளை அனுப்பி வரவழைத்துக் கொடுப்பதாகச் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்ட கல்யாணியம்மாள் திரும்பி வந்து தனது நாற்காலியில் முன் போலவே உட்கார்ந்து கொண்டாள். அப்போது அவர்களிருந்த ஹாலுக்குப் பக்கத்தில் திடீரென்று ஒர் ஆரவாரம் கிளம்பியது. மேளக்காரர்களும் பாண்டு வாத்தியக்காரர் களும் தங்களது வாத்தியங்களை வைத்துக் கொண்டு பெருத்த முழக்கம் செய்யத் துவக்கினார்கள். மனிதர்களது குரலும் கேட்டது; அவ்வாறு திடீரென்று உண்டான சங்கீத முழக்கத்தைக் கேட்ட கல்யாணியம்மாளும் கோமளவல்லியம்மாளும் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்தார்கள். அந்த வாத்திய முழக்கம் பக்கத்து ஹாலிலே தான் உண்டானதென்பது நிச்சயமாகத் தெரிந்தது. சர்க்கார் கச்சேரியாக உபயோகப்படும் அந்த இடத்தில், அந்த முழக்கம் உண்டாக வேண்டிய காரணம் என்னவென்று