பக்கம்:மதன கல்யாணி-3.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 மதன கல்யாணி அவர்கள் யோசனை செய்கிறார்கள். ஒருகால் அந்த ஹால் யாருக் காவது வாடகைக்கு விடப்பட்டிருக்குமோ என்ற நினைவுண்டா யிற்று. அந்த இடத்தில் குமாஸ்தாக்களின் நாற்காலி மேஜைகளே நிறைந்திருக்கின்றன என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்னது நினைவிற்கு வந்தது. ஆகவே, அந்த முழக்கம் பக்கத்து ஹாலில் உண்டானதல்ல என்றும், அதற்கு அப்பாலிருந்த வேறொரு கட்டிடத்தில் உண்டானதென்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் மின்சார விளக்குகள் பற்றிக் கொள்ளவே அவர்கள் இருந்த அறையில் சரியான பிரகாசம் மறுபடியும் உண்டாயிற்று. அதே நிமிஷத்தில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் இருந்த ஹாலுக்கும் பக்கத்திலிருந்த ஹாலுக்கும் மத்தியில் இருந்த சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலின் கதவுகள் படீரென்று திறந்து விடப்பட்டன. உடனே கல்யாணி யம்மாளும், கோமளவல்லியம்மாளும் தங்களுக் கெதிரில் இருந்த அந்த ஜன்னலின் வழியாகப் பக்கத்து ஹாலை நோக்கினர். இன்ஸ்பெக்டர் சொன்னபடி அதற்குள் நாற்காலி மேஜை முதலிய எவ்வித சாமான்களும் காணப்படவில்லை. அந்த ஹால் முழுதும் பல நிறங்களையுடைய மின்சார விளக்குகள் நிறைந்து ஜெகஜ் ஜோதியாக இருந்தன. வாழை மரங்களாலும் தோரணங்களாலும் படங்களாலும் அந்த இடம் மிகவும் சிங்காரமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் முத்துக்களினால் கலிபாணப் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த ஒரு புரோகிதர் கலியாணச் சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தார். சுமார் 15- மனிதர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் மேளக்காரர்களும், பாண்டு வாத்தியக்காரர்களும் உட்கார்ந்து தங்களது வாத்தியங் களை பம்பம்மென்று ஊதி முழக்கிக் கொண்டிருந்தனர். மிகுந்த யெளவனப் பருவமுள்ள மணமகளும் மணமகனும் மணையின் மேல் உட்கார்ந்து .ெ கண்டிருந்தனர். ஆனால், அப்போது சுமார் 30-வயதுள்ள ஒரு தனிகரும், 20-வயதுள்ள அவரது யெளவன மனைவியும் குறுக்கே நின்று, தாரைவார்த்துக் கன்னிகாதானம் செய்து கொடுத்துக் கொண்டிருந்த சமயம் ஆதலால், மண மக்களினது முகங்கள் கல்யாணியம்மாளுக்கும் கோமளவல்லிக்கும்