பக்கம்:மதன கல்யாணி-3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதன கல்யாணி ★ ★ ★ 27-வது அதிகாரம் எட்டு நாள் வாய்தா Liசவண்ண செட்டியார் என்ற பொய்ப் பெயரை வகித்திருந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் முன்னோர் அதிகாரத்தில் துரைராஜா வினது பங்களாவிற்கு வந்து அவனோடு சம்பாஷித்திருந்து, அவனது உண்மையான யோக்கியதை எவ்வளவென்பதை அவனது வாய் மூலமாகவே உணர்ந்து கொண்டு, வக்கீல் அருணகிரிப் பிள்ளையினது ஜாகைக்குப் போய்க் கல்யாணியம் மாள் மதனகோபாலனது விஷயத்தில் அவதூறு சொல்லி அவனைக் கொல்ல முயன்றதைக் குறித்து அவளுக்கு ஒரு நோட்டீஸ் தயாரித்து அனுப்பியபின், வக்கீல் சிவஞான முதலியாரது ஜாகையை நோக்கிச் சென்றார் அல்லவா? முன்னதி காரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலாம்ராவுத்தர் மாரமங்கலத் தாரது பங்களாவில் வந்திருந்து, கடைசியாக கல்யாணியம்மாளை யும், அவளது இரண்டு புத்திரிகளையும் மோட்டார் வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு போன தினத்திற்கு முதல் நாளின் பிற்பகலிலே தான் பசவண்ண செட்டியார், முன் சொல்லப்பட்ட படி, சிவஞான முதலியாரது வீட்டிற்குச் சென்றது. அவ்வாறு சென்ற பசவண்ண செட்டியார் அவரது ஜாகையை அடைந்து வாசலிலிருந்த வேலைக்காரனைப் பார்த்து, "ஏனப்பா! வக்கீல் ஐயா உள்ளே இருக்கிறார்களா? இருந்தால், அவர்களிடம் போய், மைசூரிலிருந்து ஒருவர் அவர்களைப் பார்க்க வந்து வெளியில் இருப்பதாகச் சொல்லிவிட்டு வா" என்று நயமரகக் கூறினார். அதைக் கேட்ட வேலைக்காரன் அவரது சிறப்பான தோற்றத்தைக் கண்டு அவர் யாரோ தக்க பெரிய மனிதர் என்று யூகித்துக் கொண்டு நிரம்பவும் பணிவாக எழுந்து நின்று, "சாமீ! எசமான் உள்ளறத்தான் இருக்கறாங்க. இதோ போயி சொல்லிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/5&oldid=853448" இலிருந்து மீள்விக்கப்பட்டது