பக்கம்:மதன கல்யாணி-3.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 மதனகல்யாணி நினைவைக் கொண்டு என்ன செய்வதென்பதை உணராமல் அவர்கள் இரண்டொரு நிமிஷ நேரம் இருந்தனர். உடனே அவர்கள் அவ்விடத்தைவிட்டு நடந்து சோபாவிருந்த இடத்தை நோக்கிச் சென்று அதை உற்று நோக்கி அதன்மேல் துரைஸானி யம்மாள் இல்லை என்பதை உறுதியாக நிச்சயித்துக் கொண்ட வர்களாய், அங்கே இருந்த கதவுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்தனர். சுவரில் ஜன்னலின் கதவுகள் காணப்பட்டன ஆனாலும், அவைகள் எல்லாம் நன்றாக மூடி வெளிப்புறத்தில் தாளிடப்பட்டிருந்தன. அவைகள் நிற்க, பின்புறக் கதவும் உட்புறத்தில் தாளிடப்பட்டபடியே இருந்தது. பூமியின் கீழே ஏதேனும் சுரங்க வழி இருக்குமா என்ற சந்தேகம் உண்டாயிற்று. ஆகவே அவர்கள் இருவரும் அந்த சோபாவிருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த நன்றாகப் பார்த்தனர். எவ்வித புலமும் கிடைக்க வில்லை. அது பெருத்த கண்கட்டு வித்தைபோலத் தோன்றியது. தங்களது கண்ணிற்கெதிரில் உட்கார்ந்திருந்த துரைஸானியம்மாள் அந்த ஹாலை விட்டு எவ்வித ஒசையுமின்றி அடுத்த ஹாலுக்கு எப்படிப் போயிருப்பாள் என்ற பிரமிப்பும் மலைப்பும் எழுந்து அவர்களது அறிவை மயக்கின. ஏதோ மந்திர வித்தையின் சக்தியினாலே தான் அந்தக் காரியம் நிறைவேறி இருக்க வேண்டும் என்ற உறுதியோ அவர்களது மனதில் உண்டாயிற்று. சோபாவிருந்த இடத்தைவிட்டு மறுபடியும் ஜன்னலண்டை வந்து அங்கிருந் தோரைக் கூவியழைத்து உடனே ஆட்சேபனை செய்து அந்தக் கலியாணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் கல்யாணி யம்மாளது மனதில் உண்டாயிற்று. திருமாங்கலிய தாரணம் நிறைவேறியதை அவள் கண்ணாரக் கண்டாள். ஆனாலும், அந்தக் கலியாணத்தை அவள் உண்மைக் கலியாணம் என்றே எண்ண வில்லை ஆகையால், அதைத் தடுத்துவிட வேண்டும் என்ற உறுதி கொண்டவளாய் மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைந்து ஜன்னலண்டை ஓடினாள். அதற்குள், அந்த ஜன்னலின் கதவுகள் மூடி முன்போலவே வெளிப்புறத்தில் தாளிடப்பட்டு போயிருந்தன. உடனே கல்யாணியம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. அவள் கடுஞ்சினங் கொண்ட சிங்கம் போல மாறி, தனது கைகொண்ட மட்டும் அந்த ஜன்னலின் கதவுகளை