பக்கம்:மதன கல்யாணி-3.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 இடித்துப் பெருத்த ஆரவாரம் செய்து கதவைத் திறக்கும்படி நயமாகவும் பயமுறுத்தியும் கூக்குரல் செய்யத் தொடங்கினான். அவ்வாறு கால்நாழிகை நேரம் கழிந்தது; எவரும் கதவுகளைத் திறந்ததாகத் தோன்றிவில்லை. அவள் உடனே வாசற் கதவண்டை ஒடி, "அடே கோபாலா கதவைத்திற" என்று பன்முறை கூவியும் கதவைத் தடதடவென்றிடித்தும் பார்த்தாள். கால் நாழிகை நேரம் வரையில் மறுமொழியே கிடைக்கவில்லை. அவள் அவ்வாறு ஒவ்வொரு கதவண்டையும் போய் இடித்திடித்துப் கதறிப் பார்த்ததெல்லாம் வீணாயிற்று. கடைசியாக, அவள் சோர்வடைந்து தனது எண்ணம் பலியாதென்று நினைத்துக் கொண்டவளாய் ஒய்ந்து சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். கோமளவல்லி என்னும் பேதைப் பெண்மணி துயரமும், திகிலும், கவலையும், வியப்பும் வடிவெடுத்து வந்த உயிரற்ற பதுமை போலத் தனது தாய்க்கருகில் வியர்த்து விருவிருத்து நடுநடுங்கி நின்று கொண்டிருந்தாள். பக்கத்து ஹாலில், அதற்குமேல் அரை நாழிகை நேரம் வரையில் வாத்தியங்களினது முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தத. புரோகிதர் எல்லா மந்திரங்களையும் அப்போதே சொல்லி கங்கண விசர்ஜனம் முதலிய முடிவுச் சடங்குகளையும் முடித்ததாகத் தோன்றியது. அதன் பிறகு வாத்திய கோஷம் நின்றது. ஜனங்கள் நடமாடியதும் மெதுவாகப் பேசியதும் தெரிந்தன. கல்யாணியம்மாள் மறுபடியும் ஒருமுறை கதவை இடித்துக் கூவியழைத்துப் பார்த்தாள். மறுமொழியே கிடைக்க வில்லை. அவளும் கோமளவல்லியம்மாளும் சோர்ந்து போய் அப்படியே சாய்ந்து விட்டார்கள். மோகனரங்கனுக்குப் போலிசாரே அனுகூலமாக இருந்து, தங்களை வஞ்சித்து அழைத்து வந்து, கமிஷனரது கச்சேரிக்குள் வைத்துக் கொண்டு அந்தக் கலியானத்தை மோசக்கருத்தாக நடத்தி இருக்கிறாள் என்ற நிச்சயம் கல்யாணி யம்மாளது மனதில் ஏற்பட்டது. அவள் பொருட்டு அவ்வளவு பிரமாதமான காரியங்களையும் ஏற்பாடுகளையும் மோசத்தையும் செய்யக்கூடிய மனிதன் யாராக இருக்கலாம் என்ற யோசனையும் வியப்பும் அடைந்த கல்யாணியம்மாள், தாங்கள் அந்த இடத்தில் அந்த ராத்திரியில் எதையும் செய்ய முடியாதென்ற நிச்சயத்தை அடைந்தவளாய்க் கோமளவல்லியை ஒரு சோபாவின் மேல் шолъ.III-4