வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49
பார்த்தாள். எவ்வித மறுமொழியும் கிடைக்கவில்லை. அவளது ஆச்சரியமும் கவலையும் உச்ச நிலையை அடைந்தது. தங்கள் இருவரையும் அவர்கள் எதற்காக அப்படி உயிரோடு கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றும், எவ்வளவு நேரம் அப்படி வைத்திருப்பாளோ என்றும் கல்யாணியம்மாள் நினைத்து விவரிக்க ஒண்ணாத பரம சங்கடமான நிலைமையை அடைந் தவளாய் மிகவும் தளர்ந்து, அதற்கு மேல் தான் என்ன செய்வ தென்பதை உணராதவளாகச் சிறிது நேரம் கலங்கி மயங்கி நின்றாள்.
அப்போது கோமளவல்லி சற்று தூரத்திலிருந்த கோமளவல்லி யம்மாள் எதையோ கண்டு திடுக்கிட்டு வியப்போடு தனது தாயை நோக்கி, "அம்மா! இங்கே வாருங்கள்; அக்காள் போனவழி இதோ இருக்கிறது" என்று மிகுந்த பதைபதைப்போடு கூற, அதைக் கேட்ட கல்யாணியம்மாள் ஒருவித நம்பிக்கையை அடைந்த வளாய் எழுந்து விரைவாக ஒடினாள். துரைஸானியம்மாள் உட்கார்ந்து கொண்டிருந்த சோபாவிற்கருகில், சுவரோரமாக நாலைந்து பீரோக்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சுவருக்கும் பீரோவுக்கும் இடையில் ஒர் ஆள் போவதற்குத் தேவையான இடைவெளி இருந்தது. ஆனால் அந்த பிரோக்கள் எல்லாம் ஒன்றிற்கொன்று இடைவெளியின்றி ஒட்டினாற் போல வைக்கப்பட்டிருந்தன. கடைசியில் இருந்த பீரோவிற்கப்பால் போய், அதற்கும் சுவருக்கும் மத்தியில் இருந்த இடைவெளிக்குள் நுழைந்து சென்றால், அங்கே சுவரில் ஒரு வாசலும் கதவும் இருந்தன. அந்தக் கதவு, ஐந்து பீரோக்களுக்கும் நடுவில் இருந்தமையால் இரண்டு கோடியிலிருந்து பார்ப்பவருக்கும் அது தெரியாமல் இருந்தது. உட்புறத்தில் நுழைந்து பார்ப்பவருக்கே அது தெரியக்கூடியதாக இருந்தது. ஏதோ ஒருவித சந்தேகங்கள் கொண்ட கோமளவல்லியம்மாள் மெதுவாக நடந்து அந்த இடை வெளியில் போய் பார்த்தாள். அவ்விடத்தில் கதவு காணப்பட்டது. அவள் அந்தக் கதவின் மேல் கையை வைக்க, அது திறந்து கொண்டது. எதிர்பக்கத்து ஹால் தெரிந்தது. அதைக் கண்ட வுடனே மிகுந்த மகிழ்ச்சியடைந்த கோமளவில்லியம்மாள் உள்ளே விந்து முன் கூறப்பட்ட தனது தாயை அழைக்க அவளும்
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/53
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
