50 மதன கல்யாணி
ஆவலோடு ஒடி அந்த இடைவெளிக்குள் மெல்ல நுழைந்து அங்கே இருந்த கதவைத் திறந்து கொண்டு பக்கத்து ஹாலுக்குள் நுழைந்தாள். கோமளவல்லியும் கூடவே தொடர்ந்து சென்றாள். மறைவான வாசற்படி அங்கே இருக்கிற தென்பது முதலிய விவரங்கள் யாவும் துரைஸானியம்மாளுக்கு முதலிலேயே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவள் அப்பால் போவதற்காகவே மின்சார விளக்கு வெளிப்புறத்தில் இருந்த படியே யாரோ ஒருவரால் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் நிச்சயித்துக் கொண்டவர்களாய்ப் பக்கத்து ஹாலை அடைந்தனர்.
அப்போது அவர்களது ஆச்சரியமும், திகைப்பும், கவலையும் அச்சமும் முன்னிலும் பதின்மடங்கு அதிகரித்தன. ஏனென்றால், அந்த ஹாலில் ஒரு மனிதர்கடிடக் காணப்படவில்லை. கலியாணப் பந்தலோ போனவிடந் தெரியவில்லை. வாழை மரங்கள் தோர னங்கள் முதலிய சகலமான வஸ்துக்களும் சொப்பனம் போல அந்தரத்யானமாகி விட்டன. கலியாணம் அங்கே நடந்ததென்ற குறிப்பே அவ்விடத்தில் காணப்படவில்லை. அவர்கள் பிரமித்து மலைத்து தூக்கத்தில் நடப்பவர்கள் போலவும் நடைப்பினங்கள் போலவும் நடந்து அந்த ஹால் முழுதும் பார்த்துக் கொண்டே அதன் வெளிவாசலின் வழியாக முன் பக்கத்துத் தாழ்வாரத்திற்கு வந்து சேர்ந்தனர். அவ்விடத்திலும் ஒரு போலீஸ் ஜெவானாகிலும் அல்லது வேறே எந்த மனிதராகிலும் காணப்படவில்லை. அவர்கள் அந்தக் கட்டிடத்தை ஒரு பிரதஷினம் சுற்றிவந்து யாராகிலும் மனிதர் இருக்கிறார்களோ என்று பார்க்கிறார்கள். ஒர் ஈ, காக்கை கூடத்தென்படவில்லை; என்ன செய்வார்கள் அவர்கள் இருவரும்! மலைத்து ஸ்தம்பித்து அப்படியே சிறிது நேரம் நின்ற பின்னர், அந்த பங்களாவை விட்டு, அதற்கு நாற்புறத்திலிருந்த ராஜ பாட்டைக்கு வந்து நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தனர். முதல் நாளிரவில் தொங்கவிடப்பட்டிருந்த பலகையும் காணப்படவில்லை. என்ன ஆச்சரியம்! என்ன விநோதம்! முதல் நாளிரவில் தாங்கள் கண்ட காட்சிகள் எல்லாம் நாடகத்தின் காட்சிகள் போல மறைந்து போன அதிசயமென்ன! அது உண்மையில் போலீஸ் கமிஷனரது கச்சேரியாக இருக்குமானால்,
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/54
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
