பக்கம்:மதன கல்யாணி-3.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51 வாசப்பலகை எப்போதும் சாசுவதமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ஆகையால், அது கமிஷனரது கச்சேரியல்ல என்பது நிச்சயமாயிற்று. முதல் நாளைய நாடகத்தில் தோன்றிய அத்தனை போலீசாரும் உண்மையான போலீசார் என்பதைப்பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், அவர்கள் எல்லோரும் மோகனரங்கனுக்காக அவ்வளவு பாடுபட்டுத் தங்களை வஞ்சித்து அந்த பங்களாவுக்குக் கொணர்ந்து காரியத்தை முடித்திருக்கிறார்கள் என்றும் கல்யாணி யம்மாள் நிச்சயப்படுத்திக் கொண்டாள். அவர் அந்த ராஜ பாட்டையின் இருபுறங்களையும் நோக்க, நெடுந்துரத்திற்கப்பால் இரண்டொரு பங்களாக்களும், இடையில் தோப்புகளும் வயல்களும் இருந்தன, அது எந்த இடம் என்பதை அவர்கள் அறியக்கூட வில்லை. அந்தப் பாதையும் நிர்மானுஷ்யமாகத் தோன்றியது. தாங்கள் அவ்விடத்திலிருந்து தங்களது பங்களாவிற்கு எப்படிப் போகிறதென்ற கவலையும் அச்சமும் கொண்டவர்களாக அவர்கள் தவித்திருந்த சமயத்தில், ஒர், ஆள் மண்வெட்டியைத் தோளில் மாட்டிக் கொண்டு வந்து அந்த பங்களாவிற்குள் நுழைந்தான். அவனைக் கண்ட கல்யாணியம்மாள் மிகுந்த மகிழ்ச்சியடைந் தவளாய், அவனை நோக்கி, "அடேய் ஆளே! இது எந்த இடம்?" என்று வினவினாள். அவர்கள் தக்க பெரிய மனிதர்களது வீட்டுப் பெண்பிள்ளை என்பதை உணர்ந்து கொண்ட அந்த ஆள் மிகவும் வணக்கமாக பேசத் தொடங்கி, "இந்த ஊருக்குப் பேரு அடையாறு இம்பாங்க ஏன் சாமி? ஒங்கிளுக்கு என்னா ஒனும் இந்த வங்களாவெ நீங்க கொடக்கூலிக்கு எடுக்கப் போlங்களா?" என்றான். கல்யாணியம்மாள்:- அப்படியானால் இந்த பங்களாவிலே இப்போது யாரும் இல்லையா? ஆள்:- இல்லீங்க. இதுவரைக்கும் இதுலே சுந்தரம்புள்ளெ யின்னு ஒரு போலீசுக்காரரு இருந்தாரு. அவுரு இ.தெ உட்டுட்டு பட்டணம் போயி மூனுநாலு நாளாவது. இது இப்ப காலியாத்தான் இருக்குது. நேத்து ஒரு நாளைக்கு மாத்ரம் யாரோ போலீசுக்காரரு இதெ எடுத்து ஒரு கண்ணாளம் பண்ணினாவளாம். அவுகளும் விடியக் காத்தாலே போயித்தாங்க.