பக்கம்:மதன கல்யாணி-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 சொன்னார்கள்" என்று சொல். அவர்கள் கொண்டு வருவார்கள். நீயும் அதிலேயே உட்கார்ந்து கொண்டு வந்து சேர்; நாங்கள் அது வரையில் இந்த பங்களாவில் இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் இந்தப் பணத்தைக் கையில் வைத்துக்கொள்" என்று கூறிய வண்ணம், தனது மடியில் சொருகிக் கொண்டிருந்த பையில் இருந்து ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட, அந்தத் தோட்டக் காரன் அப்படியே செய்வதாகச் சம்மதித்து, அந்த நோட்டை வாங்கித் துணியில் முடிந்து கொண்டு மண்வெட்டியை பங்களா விற்குள் வைத்துவிட்டு, அவர்களையும் பங்களாவில் இருக்கச் செய்து, ஒட்டமாக ஒடத் தொடங்கினான். அதன் பிறகு இரண்டு நாழிகை நேரம் கழிந்தது. தோட்டக்காரன் ஒரு வாடகைப் பெட்டிவண்டியோடு திரும்பி வந்து சேர்ந்தான். உடனே கல்யாணியம்மாளும், கோமளவல்லியம்மாளும் அதற்குள் உட்கார்ந்து கொண்டனா அந்தத் தோட்டக்காரனைத் தங்களோடு கூட வரும்படி அழைத்துக் கொண்டு காலை சுமார் 10 மணிக்குத் தங்களது பங்களாவிற்கு வந்து சேர்ந்தார்கள். வண்டிக்காரனுக்கு சத்தப் பணமும், தோட்டக்காரனுக்குச் சன்மானமும் கொடுத் தனுப்பிய பின் கல்யாணியம்மாள் கோமளவல்லியோடு தனது அந்தப்புரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். தாங்கள், கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆடு போலப் போலீஸ் இன்ஸ்பெக் டரையே கடைசி வரையில் நம்பி இருந்து, சகல விதத்திலும் ஏமாற்றப்பட்டு முடிவில் துரைஸானியம்மாளையும் இழந்து அவமானப்பட்டு வர நேர்ந்ததைப் பற்றிய துக்கமும், வெட்கமும், அழுகையும் நெஞ்சை அடைத்துக் கொண்டு பொங்கி எழுந்தன. இருந்தாலும், தனது உண்மையான மனநிலைமையை வெளியில் காட்டிக்கொள்ளாமலும், துரைஸானியம்மாள் திரும்பி வரவில்லை என்பதைப் பணிமக்கள் கவனிக்காதபடியும் கல்யாணியம்மாள் கோமளவல்லியை அழைத்துக் கொண்டு அதிக விசையாக உள்ளே நுழைந்துவிட்டாள். என்றாலும், பொன்னம்மாள் முதலிய சில முக்கியமான மனிதர்கள், அவர்கள் வந்ததைக் கண்டு கொண்டார்கள் ஆதலால், அவர்கள் திரும்பி வந்ததைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களாய் ஒடோடியும் வந்து உபசார வார்த்தைகள் சொல்லத் தொடங்கினர். எதிரிகள் முதல் நாள் இரவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/57&oldid=853456" இலிருந்து மீள்விக்கப்பட்டது