பக்கம்:மதன கல்யாணி-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 பெயரை வைத்துக்கொண்டு இவ்வளவு அபாரமான மோசத்தைச் செய்திருக்கும் அந்த மனிதர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரே நேரில் புறப்பட்டு அடையாற்றுக்குப் போயிருக்கிறார். இந்த விஷயத்தைப் போலீசார் விெயிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை" என்றார். அந்த வரலாற்றைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த திகைப்பும் குழப்பமுமடைந்து, "என்ன ஆச்சரியம்! நேற்று வந்த இன்ஸ்பெக்டர் முதலிய எல்லோரும் உண்மையான போலீஸ் காரர்கள் என்றும், அந்த மோகனரங்கனுக்காக இப்படிப்பட்ட உதவி செய்கிறார்கள் என்றும் அல்லவா நான் நினைத்தேன். அவர்கள் வேஷக்காராகளா ஆகா! இப்படிப்பட்ட அதிகயமான சம்பவத்தைப் பற்றி நான் பிறந்தது முதல் இதுவரையில் காதாலும் கேட்டதே இல்லை; அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! இப்படிப்பட்ட தந்திரங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள்! அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரும், ராஜாயி என்பவளும் எப்படிப்பட்ட சாகசங்கள் செய்தார்கள்! அடாடா! நேற்று நடந்த விஷயமெல்லாம் ஒரு நாடகம் போல இருக்கிறதே யன்றி நிஜமாக நடந்தது போல எனக்குத் தோன்றவில்லையே" என்றாள். சிவஞான முதலியார், "நேற்றைய தினம் நான் சொன்ன சங்கதி உங்களுக்கு நினைவிருக்கலாம். போலீஸ் வேலையிலிருந்து தள்ளப்பட்டுப் போன சுந்தரம் பிள்ளை என்ற ஒருவனும் அவனுடைய வைப்பாட்டியும் சேர்ந்து கொண்டு தந்திரமாக ஜனங்களை ஏமாற்றி வழிப்பறி முதலிய காரியங்களைச் செய்து வருகிறார்கள் என்று சைதாப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சொன்னார் அல்லவா? அடையாற்று பங்களாவில் உங்களிடத்தில் தோட்டக்காரன் சொன்ன சங்கதியைப் பார்த்தால், அந்த பங்களாவி லிருந்த சுந்தரம் பிள்ளையே இவர்களுக்கு அனுகூலமாக வந்திருப்ப தாகத் தெரிகிறது. அவன் போலீஸ் இலாகாவில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ஜெவான்கள் முதலியோர் உபயோகிக்கக் கூடிய பல உடைகளையும் கத்தி துப்பாக்கி முதலிய சாமான்களையும் திருடி ஒளித்து வைத்துக கொண்டிருப்பதாகவும் அந்த சப் இன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/61&oldid=853461" இலிருந்து மீள்விக்கப்பட்டது