பக்கம்:மதன கல்யாணி-3.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 மதன கல்யாணி பெக்டர் நேற்றைய தினம் என்னிடத்தில் சொன்னார்கள். அவன் தன்னுடைய வசத்தில் பல ஆயுதங்களையும் தயாராக வைத்திருப்ப தாகவும் தெரிகிறது. மோட்டார் வண்டியை வாடகைக்கு வாங்கி இருப்பான். அந்த பங்களாவை அவன் இதுவரையில் வைத்திருந்து இப்போது வாரண்டுக்காக பயந்து கொண்டு அதைக் காலி செய்து விட்டு எங்கேயோ போயிருக்கிறான். நான் இன்றைய தினம் அதன் சொந்தக்காரரான வக்கீல் வீட்டுக்குப் போய் அவரைக் கண்டு பேசினேன். அந்த பங்கள இன்னமும் அந்த சுந்தரம் பிள்ளையின் வசத்திலேயே இருப்பதாக அவர் சொன்னார். இந்த விவரங்களை யும், நேற்று ராஜாயி என்ற பெண் துருக்கச்சியாக வந்ததையும் யோசித்துப் பார்த்தால், அவள் அவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறாள் என்று நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. சைதாப் பேட்டை ரோட்டில் நம்மிடத்திலிருந்து சொத்து மூட்டையை அபகரித்துக் கொண்டு போனவளும் அந்த ராஜாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நேற்று இன்ஸ் பெக்டராக வந்தவன் அந்த சுந்தரம் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிறிது யோசனை செய்து, "ஆம்; அப்படித் தான் இருக்க வேண்டும். நேற்றைய தினம் கலியாணம் நடந்த போது, அந்த ராஜாயியும், இன்னொரு புருஷனும் நின்று கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள். அந்த மனிதனுக்கும், நேற்று வந்த இன்ஸ்பெக்டருக்கும் பலவிதத்தில் ஒற்றுமை இருப்பதாக இப்போது தெரிகிறது. அதுவும் தவிர, சைதாப்பேட்டைப் பாதையில் இன்ஸ்பெக்டர் போல வந்த வளுடைய சாயல் பருமன் முக அமைப்பு முதலியவைகளும் ராஜாயியின் சாயல் முதலியவைகளும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆகையால, அவர்கள் இருவருமே இந்தக் காரியங்களை எல்லாம் செய்தவர்கள் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. என்ன நம்முடைய கஷ்டகாலம்! துரைஸாணியின் தலைவிதி இப்படியா முடிய வேண்டும். அடாடா! கேவலம் கொள்ளைக்காரர்களான அந்த மனிதர்களோடு தானா இவள் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும்! ஐயோ! தெய்வமே! என் வாயில் நீ இப்படியா மண்ணைப் போட வேண்டும். ஆகா! என் வயிறு எரிகிறதே!" என்று மிகவும் நயமாகக் கூறினாள்.