பக்கம்:மதன கல்யாணி-3.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 சிவஞான முதலியார், "அவர்கள் பேரில் வாரண்டு பிறந்திருக்கிறது. அவர்கள் போலீசாருடைய பெயரைக் கெடுத்துக் கொண்டிருக் கிறார்கள் ஆகையால், போலீசார் அவர்களைப் பிடிக்காமலும் சிறைச் சாலைக்கு அனுப்பாமலும் தூங்கமாட்டார்கள். இந்த மோகனரங்கம் அவர்களுக்கு அநுசரணையாக இருந்தான் என்று, அவனையும் தண்டித்து தண்டனைக்கு ஆளாக்கிவிடுவார்கள். அதன் பிறகு தான் நம்முடைய குழந்தையின் கதி பரிதாபகரமாகி விடும். ஆகையால் நாம் இந்த விஷயத்தை இனி அஜாக்கிரதையாக விட்டுவிடக் கூடாது. போலீஸார் இன்னம் இரண்டொரு நாளைக்குள் அந்த சுந்தரம் பிள்ளை முதலியோரைப் பிடித்துக் கொள்வது நிச்சயம். அப்போது, அவர்களோடிருக்கும் நம்முடைய குழந்தையைக் கொணர்ந்து எவரும் அறியாதபடி நம்மிடம் சேர்த்துவிடும்படி நான் போலீசாரிடத்தில் சொல்லி இருக்கிறேன். அப்படிச் செய்வதாக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால் நாமும் இந்த விஷயத்தில் எச்சரிப்பாக இருக்க வேண்டும். குழந்தை இப்போது பங்களாவில் இருக்கிறதாகவே எல்லோருக்கும் நாம் சொல்லி வைக்க வேண்டும். பெண் உங்களோடு திரும்பி வரவில்லை என்பதை அறிந்தவள் பொன்னம்மாள் ஒருத்தி தான் என்று நின்ைக்கிறேன். இதை வெளியிட வேண்டாம் என்று நான் அவளிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அதோடு, அவள் இங்கே தான் இருக்கிறாள் என்று வேலைக்காரர்களிடத்தில் எல்லாம் சொல்லி வைக்கும்படியும் அவளை எச்சரித்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த துயரத்திலாழ்ந் தவளாய், "அந்தப் பாவிகள் தாலி முதலியவைகளை எல்லாம் கட்டி பெண்ணை அநியாயமாகக் கெடுத்து விட்டார்களே! இனிமேல் அவளைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறது. அவளை இனிமேல் எவனுக்கும் கட்டிக்கொடுக்கவும் வகையில்லை. அக்கிரமத்துக்கு பயப்படாமல், நாம் யாருக்காவது அவளை மறுபடியும் கட்டிக்கொடுக்க எத்தனித்தாலும், அவள் நம்முடைய சொல்படி அடங்கி நடக்கக்கூடியவளல்ல. கலியாணம் செய்து கொடுக்காமலே அவளை நாம் வீட்டில் வைத்துக் கொண் டிருந்தால், ஊரார் என்ன தான் சொல்லமாட்டார்கள்! அவளும் சரியான நடத்தை உடையவளாக இருக்க வேண்டாமா? என்னவோ,