பக்கம்:மதன கல்யாணி-3.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 61 உயர்ந்த துல்லியமான ஜரிகை வஸ்திரங்களையும், தங்கச் சங்கிலி உள்ள கடிகாரத்தையும், விலையுயர்ந்த மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார்; கன்னங்கரேலெனக் கருத்திருந்த மீசைகள் அவரது முகத்திற்கு ஒருவித கம்பீரத்தையும் வீரத்தையும் முரட்டுத் தனத்தையும் உண்டாக்கின. ஆனாலும், அவரது செவிகளில் நகூடித்திரங்கள் போலச் சுடர்விட்டெரிந்த வைரக்கடுக்கன்கள் அந்த முகத்தில் ஒருவித இனிமையையும், குளிர்ச்சியையும், ஜ்வலிப்பை யும் உண்டாக்கின. அவரது உடம்பின் மிருதுத்தன்மையும், இயற்கையான வசீகரமும், அவர் பிறப்பு முதலே செல்வாக்கி லிருந்து வந்தவர் என்பதைக் காண்பித்தன. அவருக்குப் பின்னால், ஒரு ஸ்திரீயும் தொடர்ந்து வந்தாள். அந்த மாதின் வயது சுமார் 35இருக்கலாம். சிவந்த கட்டான கொழுத்த சரீரமும், வசீகரமான பரந்த முகமும் பெற்றிருந்த அந்த மாது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் சிறந்த ஆபரணங்களையும் ஜரிகைகள் நிறைந்த பட்டாடைகளையும் அணிந்து ஒரு ராஜாத்தி போல நடந்து வந்தாள். அவள் இயற்கையிலேயே செல்வமும் செழிப்பும் வாய்ந்தவள் என்பதை, அவளது விலாப்பக்கங்களிலும் ஏற்பட்டிருந்த அழகிய சதை மடிப்புகளும், அன்ன நடையைப் பழித்த உத்தமஜாதி நடையும், பிறரைக் காணும் போது தானாகவே ஏற்படும் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்ற விலைமதிப்பற்ற குணங்களும், முகத்தின் களையும், மான் போன்ற கபடமற்ற பார்வையும் நன்றாக விளக்கின. அந்தப் பெண்மணிக்குப் பின்னால் நான்கு தாதிகள் பெருத்த பெருத்த வெள்ளித் தட்டுகளில் தாம்பூலம், கற்கண்டு, சர்க்கரை, பழவகைகள், பனாரீஸ் பட்டுப் புடவை, விலையுயர்ந்த ரவிக்கைகள் முதலிய ஏராளமான சுபகாரிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால், அந்த பங்களாவின் தாதிகளுள் சிலரும் தொடர்ந்து வந்தனர். அவ்வாறு எதிர்பாரா வகையாக வந்த விருந்தாளிகளையும், வரிசைகளையும் கண்ட கலயாணியம்மாள் பெருத்த வியப்பும் பிரமிப்பும் பேரச்சமும் நடுக்கமும் அடைந்தவளாய் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, ஜெமீந்தாரினது உறவினரான மனிதர் வருவதைக் கருதியும், முக்கியமாக, யாரோ பெரிய மனிதர் வீட்டுப் பெண்