பக்கம்:மதன கல்யாணி-3.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 மதன கல்யாணி போல் வருவதைக் கருதியும், சிவஞான முதலியார் விரைவாகத் தமது ஆசனத்தை விட்டெழுந்து மிகுந்த வணக்க வொடுக்கத்தோடு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்ற வண்ணம், முன்னால் வந்த மனிதருக்கு நமஸ்காரம் செய்து, "வாருங்கள் வாருங்கள். இப்படி உட்காருங்கள்" என்று மிகுந்த அன்போடு உபசரித்து, அவரை ஒரு சாய்மான சோபாவில் உட்கார வைக்க, அது போலவே, கல்யாணி யம்மாள் தனது இயற்கையான நாணத்தையும் கிலேசத்தையும் உத்தம ஜாதி ஸ்திரீகளினது வசீகரமான தன்மைகளையும் தோற்றுவித்து, விருந்தாளியாக வந்து ஸ்திரீயை அந்தரங்கமான அன்போடு உபசரித்ததன்றி, கட்டிலிற்கு மறைவில் போடப் பட்டிருந்த ஒரு சோபாவில் அவளை உட்காரச் செய்தாள். அவர்களோடு வந்த தாதிகள் தாங்கள் கொண்டு வந்த வரிசைகளை எல்லாம் மிகவும் மரியாதையாகவும் வணக்க வொடுக்கத்தோடும் கல்யாணியம்மாளுக்கெதிரில் நீட்ட, அந்தச் சீமாட்டி தனது சிரத்தின் அசைப்பால் அவைகளை ஏற்றுக் கொண்ட வண்ணம் புன்னகையாகத் தனது தாதிகளை நோக்கி, அவர்கள் அந்தத் தட்டுகளை வாங்கி ஒரு பக்கத்தில் வைத்தனர். விருந்தினராக வந்த அந்த மனிதர் சிவஞான முதலியாரை உட்காரச் செய்து, "இந்த சமஸ்தானத்தின் போஷகர்களில் ஒருவரான வக்கீல் முதலியாரும் எஜமானியம்மாள் அவர்களும் பேசிக் கொண்டிருப்பதாக வேலைக்காரர்கள் சொன்னார்கள். நாங்கள் தங்களுடைய சமூகத்தை அறிந்து கொள்ளாமலே உள்ளே வந்து விட்டோம். அதனால் தங்களுக்கு வேலைக் குந்தகம் ஏற்பட்டிருக்கும்" என்று உபசார வார்த்தை கூறிய வண்ணம் தமது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். அதை மிகுந்த மரியாதையோடு வாங்கிய முதலியார் அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன், அதைக் கொண்டு போய்க் கல்யாணியம்மாளிடம் கொடுக்கும்படி ஒரு தாதியிடம் நீட்ட, அவள் அவ்வாறே கொண்டு போய்க் கொடுத்தாள். அந்தக் கடிதத்தைக் கல்யாணியம்மாள் வாங்கிப் பார்க்கவே, அவளது முகம் சடக்கென்று மாறுபட்டுப் பிரேதக்களை அடைந்தது. அடிவயிற்றில் பெருத்த நெருப்பு விழுந்தது; மூளை குழம்ப, அறிவு மழுங்கியது; தேகம் வெடவெட வென்று நடுங்க ஆரம்பித்தது. ஆனாலும், அவள் ஏதோ அவசர