பக்கம்:மதன கல்யாணி-3.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 மதன கல்யாணி எதிாபார்த்திருந்தவர்கள் ஆயிற்றே. அப்படி இருக்க, நாங்கள் வராமல் இருப்போமா? இன்னும் தாங்கள் தந்தியொன்று அனுப்ப வேண்டுமா? லக்னப் பத்திரிகை தயாராக இருக்கிறதல்லவா?" என்று இனிமையாகக் கூறினார். கல்யாணியம்மாள், ஏதோ ஒரு புளுகைச் சொல்கிறாள் என்றும், அவள் தாறுமாறாகப் பேச்சில் மாட்டிக் கொள்வாளோ என்றும் சிவஞான முதலியார் நினைத்துப் பெரிதும் தத்தளித்திருந்தார். அப்போது கல்யாணியம்மாள் இளைய ஜெமீந்தாரை நோக்கி, "இன்று காலையில் நாங்கள் லகனப் பத்திரிகை தயார் செய்வதாகத்தான் எண்ணியிருந்தோம். நேற்று ராத்திரி பெண்ணின் உடம்புக்குக் கொஞ்சம் அசெளக்கியம் ஏற்பட்டது. இன்று காலையில் அவள் குணமடைந்து விடுவாள் என்று நினைத்தோம். ஆனால், அவளுடைய அசெளக்கியம் அதிகப்பட்டிருக்கிறது: வைத்தியர் வந்து பார்த்து, முகூர்த்த நாள் குறிப்பதைக் கொஞ்சம் ஒத்தி வைக்கும்படி சொனனார். இநத விஷயத்தைத் தங்களுக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து, மறுபடி யும் நாங்கள் எழுதும் கடிதத்தைப் பார்த்துக் கொண்டு புறப்பட்டு வரலாம் என்று தங்களைக் கேட்டுக் கொள்ள நினைத்தோம். இன்று பகலுக்குள் மனிஷ்யாள் வராவிட்டால், தங்களை அனுப்பலாம் என்று எண்ணினோம்" என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், "ஒகோ! அப்படியா பெண்ணுக்கு உடம்பு அசெளக்கியமாகவா இருக்கிறது! சரி, அப்படியானால் குணமடைந்த பிறகு முகூர்த்த நாள் வைத்துக் கொள்ளுவோம்; பெண் தேக அசெளக்கியத்தோடு இருப்பது நிச்சியந்தானே? அது தான் உண்மையான காரணமா? அல்லது, வேறே ஏதாவது குந்தக முண்டா? அப்படி இருந்தாலும் மனசைவிட்டுச் சொல்லி விடுங்கள்; நாங்கள் இந்த ஆசையை விட்டுவிடுகிறோம்" என்று புன்னகை யோடு நயமாகக் கூறினார். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது நெஞ்சம் திடுக்கிட்டு, பல வகையில் சந்தேகப்பட்டது. இருந்தாலும், அந்தச் சீமாட்டி அவரை நோக்கி, "என்ன அப்படி பேசுகிறீர்களே! நாங்கள் இவ்வளவு தூரம் எழுதிவிட்டு இனி பிறழ்வோமா? அது ஒருகாலுமில்லை. பெண் தேக அசெளக்கியமாக இருப்பதே காரணம்; வேறொரு காரணமும்