பக்கம்:மதன கல்யாணி-3.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 "வாருங்கள்; அதோ இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மைசூரிலிருந்தா வருகிறீர்கள்? உங்களை கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தார் அனுப்பினாரோ?" என்று நயமாக மொழிந்தார். அதைக் கேட்ட பசவண்ண செட்டியார், அங்கே கிடந்த ஒரு நாற்காலியின் மேல் அமர்ந்தவராய், "ஆமாம்; அங்கே இருந்து தான் என்னை அனுப்பியது. வக்கீல் சிவஞான முதலியார் என்பது தாங்கள் தானே?" என்று அவரை அறியாதவர் போல வினவினார். சிவஞான முதலியார், "ஆமாம்; நான்தான் சிவஞான முதலியார்" என்றார். பசவண்ண செட்டியார் சந்தோஷமும் புன்னகையும் தமது முகத்தில் தோற்றுவித்து, "சரி; நெடுநாளாகத் தங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒர் அவா இருந்தது. இப்போது தங்களைக் கண்டது நிரம்பவும் சந்தோஷமாயிற்று. கிருஷ்ணாபுரத்து ஜெமீந் தார் தங்களுக்கு என் மூலமாக ஒரு கடிதம் கொடுத்தனுப்பி இருக்கிறார்கள். அது இதோ இருக்கிறது" என்று கூறிய வண்ணம் தமது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, ஒரு கடிதத்தை எடுத்து, முதலியாரிடத்தில் மரியாதையாக நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டார். அவ்வாறு அவர் வாங்கிய போது, அவரது கைகள் வெடவெடவென்று ஆடின. முகமும் மாறுபட்டுப் போயிற்று. அவர் உடனே நிமிர்ந்து உட்கார்ந்து அந்தக் கடிதத்தைப் பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: சென்னை மைலாப்பூரிலிருக்கும் ஜெமீந்தார் மகா-ா-ா-பூரீ சிவஞான முதலியார் அவர்களுக்கு, - மைசூரிலிருக்கும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் சோமசுந்தர துரை எழுதிக் கொண்ட விக்ஞாபனம். உபயகூேடிமம். இந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறவரான மகா-ா-ா-பூரீ பசவண்ண செட்டியார் அவர்கள், நான் இந்த ஊரில் பல வருஷங் களாகச் செய்து வரும் சந்தனக்கட்டை வியாபாரத்தில், என்னோடு கூட்டாளியாக இருந்து வியாபாரம் செய்து வருபவர்கள். இவர்கள்