பக்கம்:மதன கல்யாணி-3.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 போய்ச் சேர்ந்தனர். கல்யாணியம்மாள் இளைய ஜெமீந்தாரினது மனைவியோடு முதலில் உள்ளே நுழைந்து அங்கே கிடந்த கட்டிலண்டை சென்றாள், சிவஞான முதலியாரும் ஜெமீந்தாரும் உள்ளே நுழைந்து சற்று தூரத்தில் விலகி நின்றபடியே கட்டிலை நோக்கினர். அந்தச் சமயத்தில் சிவஞான முதலியாரது மனம் பட்டபாடு என்னவென்று சொல்வது! அடுத்த நிமிஷத்தில் தங்களது யோக்கியதையும் மானமும் போய்விடப் போகின்றனவே என்ற அச்சமும் கவலையும் கொண்டவராய்க் குன்றிப் போய் அவர் நின்றார். அப்போது அங்கே கிடந்த கட்டிலின் மேல் ஒரு விநோதக் காட்சி காணப்பட்டது. கால் முதல் தலை வரையில் ஒரு சால்வையால் நன்றாக மூடிக் கொண்டு கோமளவல்லியம்மாள் படுத்திருந்தாள். அவளது முகம் முழுதும் மஞ்சள் பற்றுப் போடப்பட்டிருந்தது. அவளது பக்கத்தில் பொன்னம்மாள் உட்கார்ந்து உடம்பைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அந்த நிலைமையில் கல்யாணி யம்மாளும் ஜெமீந்தாரின் மனைவியும் கட்டிலை நெருங்கிய போது, கோமளவல்லியம்மாள் அப்பா அம்மா என்று முக்கி முனகி அப்புறம் இப்புறம் புரண்டு நிரம்பவும் வேதனைபட்டுக் கொண் டிருந்தாள். கட்டிலண்டை நெருங்கிய கல்யாணியம்மாள் மிகுந்த விசனமும் இரக்கமும் உருக்கமும் தோன்ற கோமளவல்லியம் மாளினது முகத்தைத் தடவிக் கொடுத்தபடி, "அடீ பொன்னம்மா! குழந்தைக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்க, அவள், "மின்னெக்கி இப்ப கொளந்தே ரொம்பக் கஸ்டப் படுதுங்க. இன்னொரு தரம் டாக்குட்டரெ இட்டாந்தா நல்லதுங்க; வாய் ஒயாமே முக்குது மொனகுது; பல்லெ நறநறன்னு கடிக்குது; ஒடம்பெப் போட்டு முறுக்கிக்குது; தாவம் தாவமின்னு பறக்குது. ஜன்னி தோசத்துக் குறியெல்லாம் காணுது" என்று மேன்மேலும் அடுக்கிக் கொண்டே போனாள். அதைக் கேட்ட கல்யாணியம் மாளினது கண்களில் இருந்து கண்ணித் துளிகள் மளமளவென்று உதிர்ந்தன. அவள் மிகவும் பதறிப் போனவளாய், வாத்சல்யத் தோடு கோமளவல்லியை நோக்கி, "கண்ணு துரைஸானியம்மா! கண்ணைத் திறந்து பார்; உடம்பு என்ன செய்கிறது? இதோ பார்: ராமலிங்கபுரத்திலிருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்"