72 மதன கல்யாணி
வைகளை வழங்கி பதில் மரியாதை செய்து அவர்களுக்கு விடை கொடுக்க, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களாய் அவ் விடத்தை விட்டுச் சென்றனர்.
வெளிவாசல் வரையில் அவர்களோடு கூடவே போய், வழி அனுப்பி அவர்களை வண்டியில் ஏற்றிவிட்டு சிவஞான முதலியார் மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் கொண்டவராகத் திரும்பி வந்து சோந்தார். கல்யாணியம்மாள் களைத்துப் போய் ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்திருந்தாள். அப்போது உள்ளே வந்த சிவஞான முதலியார் அந்த அம்மாளை நோக்கிப் புன்னகை செய்தவராய், "பேஷ்! நல்ல தந்திரம் செய்தீர்கள்! உங்களுடைய சாமர்த்தியம் யாருக்கும் வராது! முதலில் நான் நிரம்பவும் பயந்துவிட்டேன். கோமளவல்லியம்மாளுக்கு உடம்பு அசெளக்கியமாக இருக்கிற தென்பதும் எனக்குத் தெரியாது; துரைஸானியம்மாளுக்குப் பதிலாகக் கோமளவல்லியம்மாளைக் காட்டப் போகிறீர்கள் என்பதும் எனக்குத் தோன்றவில்லை, ஆகையால், நான் எவ்வளவு தூரம் பயந்து நடுங்கிவிடடேன் தெரியுமா? நல்ல வேளையாக, எல்லாம் நன்மையாகவே முடிந்து போயிற்று. இல்லாவிட்டால், நமக்கு எவ்வளவு பெருத்த அவமானம் ஏற்பட் டிருக்கும் தெரியுமா? என்னவோ அந்தக் கடவுள் தான் உங்களுக்குச் சமயத்தில் இந்தப் புத்தியைக் கொடுத்தார்" என்று கூறிய வண்ணம் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்தார்.
அந்தச் சமயத்தில் அந்த அந்தப்புரத்தின் பின்புற வாசற்கதவு திறக்கப்பட்டது; பொன்னம்மாள் முன்னும் கோமளவல்லியம் மாள் பின்னுமாக உள்ளே நுழைந்தார்கள். போர்வை, பற்று முதலிய எதுவும் கோமளவல்லியின் மேல் காணப்படவில்லை. அவள் வந்ததைக் கண்ட கல்யாணியம்மாள் தனது நாற்காலியை விட்டெழுந்து பாய்ந்து குழந்தையைக் கட்டித் தூககி முத்தமிட்டு, "ஆ! என் கண்ணெ! என் தங்கமே! உனக்குச் சமானமான பெண்ணை இந்த உலகத்தில் வேறே யாராவது பெற்றிருப்பாாகளா என்பதே சந்தேகம்! மூத்த பெண்ணினால் எனக்கு ஏற்பட இருந்த அவமானத்திலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட்டால், இந்நேரம் நான் நாக்கைப் பிடிங்கிக் கொண்டு இறந்து போயிருப்பேன்.
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/76
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
