பக்கம்:மதன கல்யாணி-3.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 பொன்னம்மாளிடத்தில் நான் இரண்டொரு வார்த்தை தான் சொல்லி அனுப்பினேன்; நீ அந்த மாதிரி நடப்பாயோ மாட்டாயோ என்று நான் கடைசி வரையில் பயந்து கொண்டே இருந்தேன்; நல்ல வேளையாக நீ சரியாகவே நடந்து கொண்டாய்; எனக்கு வந்த இத்தனை துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் நீ ஒருத்தி தான் எனக்கு ஒப்பற்ற நிதிக்குவியல் போல இருந்து, என் மேல் அளவற்ற வாஞ்சை வைத்து எனக்கு உண்டாகும் சுகதுக்கங் களை எல்லாம் உன்னுடைய சுகதுக்கங்களாக மதித்து நடந்து கொள்ளுகிறாய். பெற்றவரின் மனம் போல நடந்து கொள்ளும் குழந்தைகளே உத்தம ஜாதிக் குழந்தைகள். அவர்களுக்கு ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கமாட்டான். நீ நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட்டு, தீர்க்க சுமங்கலியாகவும் அமோகமாகவும் வாழ வேண்டும். அந்தப் பெண்ணும பிள்ளையும் இனி எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலையில்லை. நீ மாத்திரம் எப்போதும் இதே மாதிரி பரிசுத்தமான நடத்தை உடையவளாக இருக்க வேண்டும்" என்று கூறிய வண்ணம் இன்னொரு தரம் வாத்சல்யத்தோடு அவளை ஆலிங்கனம் செய்து உச்சி முகந்து விடுத்தாள். கோமளவல்லி யம்மாள் வியாதியாய் இருப்பதாக அவ்வளவு சாகசம் செய்தாள் என்பதை அப்போதே உணர்ந்த சிவஞான முதலியார் வியப்பும் திகைப்பும் கரைகடநத மகிழ்ச்சியும் அடைந்தவராகச் சிறிது நேரம் இருந்த பின் தமக்கு நேரமாகிறதென்று சொல்லி விடைபெற்றுக் கொண்டெழுந்தார். அந்தச் சமயத்தில் அவரது பார்வை அவருக்குப் பக்கத்திலிருந்த மேஜையின் மீது உடைக்கப்படாமல் கிடந்த ஒரு ரிஜிஸ்டர் காகிதத் தின் மேல் சென்றது. அதன்மேல், அனுப்பு:- அருணகிரிப் பிள்ளை, பி.ஏ. பி.எல்., வக்கீல் மைலாப்பூர் என்று எழுதப் பட்டிருந்ததைக் கண்டு, சிவஞான முதலியார் மிகவும் வியப்புற்று, "இதென்ன வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருக்கிறதே! இது எப்போது வந்தது?" என்று கேடட வண்ணம் அதைக் கையில் எடுத்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கல்யாணியம்மாள், "ஒகோ அது நேற்றைக்குக் காலையில் வந்ததாயிற்றே. நக்ஷத்திரத் தரகனுடைய கடிதத்தை வாசித்தபின் வேறே எதையும் படிக்காமல் நான் வைத்து விட்டேன. அவைகளுள் இந்த ரிஜிஸ்டர் கடிதமும்