பக்கம்:மதன கல்யாணி-3.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 மதன கல்யாணி ஒன்று போலிருக்கிறது. எங்கே? இப்படிக் கொடுங்கள். படித்துப் பார்க்கலாம்" என்றாள். உடனே சிவஞான முதலியார் அதைக் கொடுக்க, கல்யாணியம்மாள் வாங்கிப் பிரித்து உள்ளே இருந்த காகிதத்தை எடுத்துப் படிக்கலானாள். ★ ★ ★ 30-வது அதிகாரம் பிராயச்சித்தம் அவ்வாறு வக்கீல் நோட்டிஸைப் பிரித்து வைத்துக் கொண்டு தனது மனத்திற்குள்ளாகவே சிறிது தூரம் படித்துக் கொண்டு போன கல்யாணியம்மாள் அதில் மகா விபரீதமான சங்கதி அடங்கி இருக்கக் கண்டு, பெருத்த திகிலும் கவலையும் கொண்டாலும் அந்த விஷயம் சிவஞான முதலியாருக்குத் தெரிந்தால், தனக்கு அவமானம் ஏற்படக்கூடிய சங்கதியாதலால், அதை அவருக்குச் சொல்லாமல் எப்படி மறைக்கிறதென்று யோசனை செய்தவளாய், அப்படியே மயங்கி விழுபவள் போலத் தனது நாற்காலியிற் உட்கார்ந்து கண்மூடிச் சாய்ந்து, தனது வலக்கரத்தால் நெற்றியை அழுத்திக் கொண்டாள். அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் இருந்த பிறகு அந்த அம்மாள் கண்களை விழித்துக் கொண்டு சிவஞான முதலியாரைப் பார்த்து, "இந்த இரண்டு தினங்களாக ஏற்பட்ட அல்லல்களினாலும் கவலைகளினாலும் எனனுடைய மனசு புண் போல இருக்கிறது. நாலைந்து வரிகள் படிக்கும் முன் மயக்கம் வருகிறது. இதில் என்ன அவசரமான சங்கதி இருந்தாலும் இருக்கட்டும். இன்றைக்கு வைத்திருந்து காலையில் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய கணக்குக்கு நாம் அனுபவித்த வேதனை கள் போதுமானவை. இதைப் படித்து இன்னுமொரு புதிய சங்கடத்தை விலைக்கு வாங்க வேண்டாம். இதை நாளைய கணக்குக்கு வைத்துக் கொள்வோம்" என்று உருக்கமாகவும் பரிகாசமாகவும் கூறினாள். அதைக் கேட்ட சிவஞான முதலியார் அதைப் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாதவராய் விடைபெற்றுக் கொண்டு எழுந்து போய்விட்டார்.