பக்கம்:மதன கல்யாணி-3.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 உடனே கல்யாணியம்மாள் சிற்றுண்டி, காப்பி முதலியவை களைத் தருவித்து கோமளவல்லியம்மாளுக்கும் கொடுத்துத் தானும் உண்டபின் புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கும்படி தனது புதல்வியைப் பக்கத்திலிருந்த கூடத்திற்கு அனுப்பிவிட்டு ஒய்ந்து தளர்ந்து தனது பஞ்சணையின் மேற் படுத்த வண்ணம் வக்கீல் நோட்டீஸை எடுத்து வைத்துக் கொண்டு மனதிற்குள்ளாகவே படிக்கலானாள். அதை மறுநாள் படித்துக் கொள்ளலாம் என்று சற்று நேரத்திற்கு முன் சிவஞான முதலியாரிடத்தில அலட்சியமாகக் கூறினாள் ஆனாலும், அவளது மனம் அதே நினைவும் கவலையும் கலக்கமும் அடைந்திருந்தமையால், தான் தனியாக விடுபட்டவுடனே அதை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினாள்; அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: சென்னை மைலாப்பூரில் இருக்கும் வக்கீல் அருணகிரிப் பிள்ளை (பி.ஏ., பி.எல்.,) இடத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாரமங்கலம் ஜெமீந்தாரிணியான மகா-ா-ா-பூரீ கல்யாணி யம்மாள் அவா.களுக்கு, அம்மாள்! செனற சில மாதகாலமாக உங்களுடைய பங்களாவிற்கு வந்து உங்களுடைய புத்திரிகளுககு வீணை கற்றுக் கொடுத்து வந்த மதனகோபாலன் என்னும் எனது கட்சிக்காரர் மீது நீங்கள் துர்எண்ணங் கொண்டு அவர் உங்களுடைய அந்தப்புரத்திற்குள் தனியாக வந்திருந்த ஒரு சமயத்தில், நீங்கள் அவரிடத்தில் மோகா வேசமான வார்த்தைகளை உபயோகித்து அவருடைய தேக சம்பந்தத்திற்கு ஆசைப்பட்டுப் பலவகையான முயற்சிகள் செய்த தாகவும் அவர் அதற்கிணங்காமல் தப்பித்து ஓடிவிட்டதாகவும் அவர் எனக்கு எனக்கு அறிவிக்கிறார். அதன் பிறகு மறுநாள பிற்பகலில் நீங்கள் அவர் தொழில் செய்யும் பங்களாக்களுக்கெல்லாம் போய், அவரைப் பற்றி அவதூறும் அபாண்டமுமான வார்த்தைகளைச் சொல்லி அவரை அவர்கள் எல்லோரும் வேலையில் இருந்து உடனே விலக்கும்படி செய்து அவருக்கு மான நஷ்டமும், பொருள் நஷ்டமும் உண்டாக்கி இருப்பதாகவும் அவர் அறிவிக்கிறார்.