பக்கம்:மதன கல்யாணி-3.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 மதன கல்யாணி அதன் பிறகு இந்த விஷயமாக அவர் உங்கள் பேரில் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாக அவருடைய நண்பர் ஒருவர் மூலமாக உங்களுக்குத் தெரிவிக்க, நீங்கள் அவர்களுக்குத் திருப்திகரமான மறுமொழி சொல்லாமல் அவரை அனுப்பிவிட்ட தாகவும் அதன் பிறகு நீங்கள் கிருஷ்ணாபுரத்து இளைய ஜெமீந் தாரான துரைராஜா என்பவருக்கு, துரையம்மாள் என்ற பொய்க் கையெழுத்திட்டு, ரகசியமான இரண்டு கடிதங்கள் எழுதியதாகவும், அதன் பிறகு நீங்கள் ரென் பென்னெட்டு கம்பெனியிலிருந்து வெள்ளைக்காரியின் உடையொன்று வாங்கித் தரித்துக் கொண்டு பார்க் உத்யான வனத்திற்கு வந்து துரைராஜாவைச் சந்தித்து எனது கட்சிக்காரர் வீட்டைவிட்டு ஆறுமாத காலத்துக்கு வெளியில் வர முடியாதபடி அவருக்குத் தேகத்துன்பம் உண்டாக்கும்படி தூண்டியதாகவும், அதன்படி அவர், ஒரு நாள் இரவில் எனது கட்சிக்காரரைத் துப்பாக்கியால் சுட்டு, அவருடைய உயிருக்கே அபாயம் நேரக்கூடிய நிலைமையை உண்டாக்கி விட்டதாகவும், அதன் பலனாக என்னுடைய கட்சிக்காரர் இன்னமும் அபாயகர மான நிலைமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறதோடு, மேலே குறிக்கப்பட்ட குற்றங்கள் யாவற்றையும் தாங்கள் செய்தது உண்மைதான் என்று மெய்ப்பிப்பதற்குப் போதுமான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆகையால், இந்த நோட்டீஸ் கிடைத்த ஒருவார காலத்திற்குள், நீங்கள் அவர் பேரில் சொன்ன அவதூறு பொய்யானதென்றும், அவர் எவ்விதமான தவறும் செய்யவில்லை என்றும் பத்திரிகை யின் வாயிலாக பகிரங்கமான மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, அவருக்கு ஏற்பட்ட தேகத் துன்பத்திற்கும், உத்தியோக நஷ்டத் திற்கும், மான நஷ்டத்திற்கும் அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ாடு செலுத்த வேண்டும். இந்த வாயிதாவிற்குள் இப்படிச் செய்யத் தவறினால் உங்கள் பேரில் சிவில் தரப்பிலும் கிரிமினல் தரப்பிலும் வியாஜ்ஜியம் தொடரப்படும் என்பதை இதன் மூலமாக நான் அறிவித்துக் கொள்ளுகிறேன். இங்ங்னம், அருணகிரி பிள்ளை வக்கீல்.