பக்கம்:மதன கல்யாணி-3.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77 - என்று எழுதப்பட்டிருநத வக்கீல் நோட்டீசை கல்யாணியம்மாள் இரண்டு மூன்று தரம் படித்துப் படித்துப் பார்த்தாள். அதுவரையில் தனக்கு நேர்ந்த எத்தனையோ துன்பங்களைக் காட்டிலும், அந்தப் புதிய துன்பமே தனது யோக்கியதையையும், தான் விலைமதிப் பற்றதாக மதித்துக் காப்பாற்றி வரும் தனது கற்பையும் அடியோடு தொலைத்துவிடக் கூடிய மகா பயங்கரமான அபாயமாக தோன்றியது. தான் குற்றவாளியோ, அல்லது, குற்றவாளியல்லவோ என்பது ஒரு பொருட்டல்ல; அந்த அசங்கியமான விஷயம் கச்சேரி வரையில் போய் அடிபடடு, தன்னைப் பற்றி ஊர் சிரிக்கும் படியான நிலைமையை உண்டாககுமே என்பதை நினைக்க நினைக்க அநதச் சீமாட்டியினது தேகம் பதறியது. பெருத்த திகிலும், கலக்கமும், குலை நடுக்கமும் உண்டாயின. அந்த மகா வெட்கக் கேடான சங்கதியைத் தான் சிவஞான முதலியார் முதலிய வக்கீல் எவரிடத்திலாகிலும் வெளியிட்டு, அவர்கள் என்ன யோசனை சொல்லுகிறார்கள் என்பதைக் கேட்பதற்கும் அவளது மனம் இடந்தரவில்லை. தேள் கொட்டிய திருடன் போல தனது சங்கடத்தை வெளியிடவும் மாட்டாமல் மறைக்கவும் மாட்டாமல் கல்யாணியம்மாள் தவிக்கலானாள். தனது புத்திரியை இழந்த விசனத்தோடு அவள் குமாஸ்தாவோடு ஒடிப்போனாள் என்று உலகத்தார் சொல்லப் போகும் ஏச்சும் கல்யாணியம்மாளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அத்தனை வருஷ காலமும் நல்ல பெயரெடுத்து சுத்தமாக இருந்தவளும், விதவை நிலைமையில் இருப்பவளும், வயது வந்த இரண்டு பெண்களுக்குத் தாயாக இருப்பவளுமான தானே அப்படிப்பட்ட கேவலமான இழிவிற்குப் பாத்திரமாவது அவளுக்கு சொற்பமும் இயலாத பேரிடியாக இருந்தது. ஆகவே, தான் எப்பாடுபட்டாகிலும் அந்த விஷயம் கச்சேரி வரையில் போகாமல் தடுத்துவிட வேண்டும் என்றும், அப்படிச் செய்ய முடியாவிட்டால் விஷத்தைத் தின்றாகிலும் தான் உயிரை விட்டுவிட வேண்டும் என்றும் கல்யாணியம்மாள் தனக்குள் முடிவு கட்டிக் கொண்டாள். பசவண்ண செட்டியார், துரைராஜா, மைனர் முதலியோர் அனைவரும் மதனகோபால னுக்கு அந்தக் காரியத்தில் அனுசரணையாக இருந்து விஷயங் களை ஒப்பிப்பார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரிந்தது. மதன