பக்கம்:மதன கல்யாணி-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மதன கல்யாணி கோபாலன் சகலமான நற்குணங்களும், பெருந்தன்மை, தயாளம், இரக்கம் முதலிய நலன்களும் நிரம்பப்பெற்ற உத்தம புருஷன் ஆதலால், அவன் தனது விஷயத்தில் கூமை காட்டுவதானாலும், அவனுக்கு அநுசரணையாக இருப்போர் அவனது மனதைக் கலைத்து விடுவார்கள் என்ற நினைவும் கவலையும் எழுந்து அந்த அம்மாளை வதைத்தன. கச்சேரிக்குப் போவதான பெருத்த அவமானத்திலிருந்து தப்புவதற்கு எவ்வளவு அதிகமான பணத் தொகை செலவானாலும், அதைப் பற்றிக் கவலையில்லை என்றும், தன்னால் மதனகோபாலனுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டத்தைக் கருதி அவனுக்கு எவ்வளவு பணம் தேவையானாலும் கொடுத்து விடுவது ஒரு பொருட்டல்ல என்றும் அவள் நினைத்தாள். ஆனால், தான் அவனது விஷயத்தில் சொன்ன அவதூறை மறுத்துப் பொய்யென்று இப்போது உடனே ஒப்புக் கொள்வதை விடத் தனது உயிரையே விட்டுவிடலாம் என்ற நினைவே உறுதியாக உண்டாயிற்று. பசவண்ண செட்டியாரோ பெருத்த தனிகராகக் காணப்படுகிறார். அவர் பொருளை மாத்திரம் கருதி அந்த நோட்டீஸை அனுப்பியவரல்ல, தாம் பிடித்த வீம்பைச் சாதித்தே தீரவேண்டும் என்ற நினைவினாலும், மதனகோபாலன் மீது சொன்ன அவதூறு பொய் என்பதை ஒப்புக் கொண்டே தீரவேண்டும் என்ற பிடிவாதத்தினாலுமே அந்த நொண்டிச் செட்டியார் அந்த நோட்டீஸை அனுப்பச் செய்திருப்பதால், தான் பணத்தினால் மாத்திரம் அவரைத் திருப்தி செய்வது பலியாக் காரியமாகத் தோன்றியது. ஆகவே, தான் அந்தப் பரமசங்கடமான நிலைமையில் என்ன செய்வதென்பதை உணரமாட்டாதவளாகத் தாமரை இலைத் தண்ணிர் போலத் தத்தளித்து நெடுநேரம் வரையில் கல்யாணியம்மாள் தனது சயனத்திலேயே படுத்திருந்தாள். அவ்வாறு இரவு எட்டரை மணி நேரமாயிற்று. அப்போது ராத்திரி போஜனத்திற்கு அழைப்பதற்காகப் பொன்னம்மாள் அங்கே வந்து சாப்பாட்டு வேளை ஆகிவிட்டதென்று தெரிவித்தாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த விரக்தியோடு பேசத் தொடங்கி, "அடி போடீ! எனக்கு சாப்பாடும் வேண்டாம்; ஒர் இழவும் வேண்டாம். தினம் தினம் வேளைக்கு வேளை இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/82&oldid=853484" இலிருந்து மீள்விக்கப்பட்டது