பக்கம்:மதன கல்யாணி-3.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79 பாழும் வயிற்றுக்குக் கொட்டிக் கொட்டி இந்த உடம்பை வளர்த்து என்ன சுகத்தைக் கண்டு விட்டோம். எனக்கு இந்தப் பூமியிலேயே இருக்கப் பிடிக்கவில்லை. எனக்குக் கொஞ்சம் விஷம் சம்பாதித்து கொடுக்கும்படியாக உன்னிடத்தில் நான் எத்தனை தடவையோ கேட்டிருக்கிறேன். அதை நீ கவனிக்கவே இல்லை" என்றாள். உடனே பொன்னம்மாள் அன்பாகக் கடிந்து, "ஏம்மா அப்படி சொல்றீங்க! நீங்க ஏம்மா வெசத்தெத் திங்கணும்? ஒங்கிளுக்கு தீம்பு நெனெக்கறானுவளே அவுங்களுக்கல்லவா வெசத்தெக் குடுக்க னும், ஒங்கிளுக் கென்னம்மா அப்பிடிப்பட்ட தலெயெஞத்து வந்திச்சு. சோத்துக்கில்லியா? துணிக்கில்லியா? அவிசாரி ஆயிட் உங்களா? அந்த ஆண்டவன் கிருவையாலெ நீங்க எப்படிப்பட்ட ஒசந்த பதவியிலே இருக்கறிங்க. நீங்க ஏம்மா சாவணும்? ஒரு பொண்ணு என்னமோ கெட்டகாரியம் பண்ணிபுட்டா அத்தோடே மத்தவங்கள்ளாம் செத்தாபூடுவாங்க. இன்னம் சின்னக் கொயந்தெ எங்கெ இருக்குது. நீங்க செத்துப்பூட்டா, அந்த கொயந்தையே ஆரம்மா கவனிப்பாங்க? அதுவும் கெட்டுப்பூடாதா? அத்தெ ஒரு நல்ல எடத்துலெ மின்னாலே கட்டிக்குடுங்க. சாவற காரியத்தெ அப்பாலெ வச்சுக்குவோம்" என்று உரிமையாகக் கண்டித்துப் பேசினாள். உடன்ே கல்யாணியம்மாள், "கோமளவல்லியம்மாள் இப்போது எங்கே இருக்கிறாள்?" என்றாள். பொன்னம்மாள்:- சாப்பாட்டெ முடிச்சுக்கினு படுக்கெக்கி பூடிச்சு. கல்யாணியம்மாள்:- சரி, நல்ல காரியம். எனக்கு சுத்தமாக பசியே இல்லை. நான் பேசாமல் படுத்துக் கொள்ளுகிறேன். அது இருக் கட்டும். நேற்றைய தினம் காலையில் நீ ஆலந்துருக்குப் போன அந்த விஷயம் எப்படி முடிந்ததென்பதை எனக்குச் சொல்லவே இல்லையே! பாலாம்பாளைத் துக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கருப்பாயியிடத்தில் சொல்லிவிட்டு வந்தாயா? பொன்னம்மாள்- நான் ஆலந்துருலெ அம்பட்டக் கருப்பாயி வூட்டுக்குப் போனேன். அவ ஊட்டுலெ இல்லெ. திரும்பி வருவா வருவா இன்னு காத்திருந்தேன். ராத்திரி 7-மணிக்கிக் கட்டெயன் கொறவன் அவளெத் தேடிக்கினு அங்கனெ வந்தான். மைலாப்பூர் in.5.HH-6