பக்கம்:மதன கல்யாணி-3.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 மதன கல்யாணி பங்களாவுக்குப் போயி உளவு பாத்துக்கினு இருக்கறத்துக்காவ கட்டெயன் அவளெ நேத்துப் பகல்லெயெ அனுப்பிச்சானாம். அவுனும் நேத்து ராத்திரி 8-மணிக்கு மைலாப்பூருக்குப் போனானாம். கருப்பாயி அம்பிடல்லியாம். அவளெத் தேடிக்கினு அவன் திரும்பி வந்துட்டான் வாலாம்பாளெத் துக்கியாறவானா முன்னு நான் அவங்கிட்ட ஒடனெ சொல்லிப்புட்டு ராத்திரி முளுதும் அவ ஊட்டுத் திண்ணெயிலெயே படித்துக் கெடந்துப் புட்டு இன்னெக்கிக் காத்தாலெதான் வந்தேன். கருப்பாயி எங்ங்ன போனான்னு தெரியலெ. ஆனா, நான் போன சங்கதியெ கட்டெயங்கிட்டச் சொல்லிபுட்டேன். அவுங்க இன்னமெ வாலாம் பாளெ ஒண்னும் செய்ய மாட்டாங்க. அதெப்பத்தி பயப்படத் தேவெயில்லெ. கல்யாணியம்மாள்:- (மிகவும் ஆத்திரமாகவும் அதிருப்தியாகவும் பேசத்தொடங்கி) நீசெய்கிற ஒவ்வொரு காரியத்திலேயும் இப்படித் தான் உறுதியாகப் பேசி பேசி பயப்பட வேண்டாம் என்று சொல்லி என் கழுத்தை அறுக்கிறாய்! உன் பேச்சைக் கேட்டு நான் ஒன்று செய்யப் போனால் அது வட்டியும் முதலுமாகப் பிரமாத மாக வந்து விளைகிறது. ஏதாவது ஒரு துன்பத்தை விலக்குவதற் காக நான் ஒரு காரியம் செய்தால், அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை ஆகிறது. ஆரம்பத்தில் நீயும் அந்தக் கருப்பாயியும் கூடி என்னை மோசம் செய்து அந்த அம்பட்டப் பையனைக் கொண்டு வந்து என் வீட்டில் சேர்த்து வைத்தீர்கள். அவனால் எனக்கு வந்திருக்கும் அவமானங்களும் இழிவுகளும் கணக்கு வழக்கில்லை. அன்றைய தினம் அந்த துரைராஜாவின் விஷயத்தில் நீ ஏதோ குயுக்தி செய்யப் போக, குட்டிகுலைத்து நாயின் மேல் வைத்தது போல, அதுவும் இப்போது என்மேல் வந்து விளைந்திருக்கிறது. எனக்கு உண்டாக இருந்த ஒரு சின்ன அவமானத்தை விலக்குவதற்காக, நீ ஏதோ ஒரு காரியம் செய்யப் போக, அந்த அவமானத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமான தலை குனிவும் இழிவும் மானக்கேடும் இப்போது வரும் போலிருக் கிறது; அந்த மதனகோபாலன் என்மேல் கச்சேரியில் வியாஜ்ஜியம் தொடரப் போகிறானாம். நான் கச்சேரிக்கு இழுபட்டு, அங்கே போய் நின்று அவமானப்படப் போகிறேன். ஊரார் எல்லாரும்