82 மதன கல்யாணி
நினைக்கிறது? அவனுடைய உடம்பில் ஒட்டிய சிறு து.ாசிக்கும் நான் கேடு நினைக்க மாட்டேன். அவன் என்னைக் கச்சேரிக்கு இழுத்து எவ்வளவு அதிகமான இழிவுக்கும் அவமானத்திற்கும் என்னை ஆளாக்கினாலும், அவனுக்கு நான் எவ்விதத் திங்கும் நினைக்க மாட்டேன். அவன் குணத்திலும் அமைப்பிலும் மற்ற எல்லா விஷயங்களிலும் நம்முடைய கோமளவல்லிம்மாளைப் போலவே இருக்கிறான் என்பதை நினைக்க நினைக்க அவன் விஷயத்தில் என் மனசில் உண்டாகும் வாத்சல்யம் இவ்வளவு அவ்வளவென்று சொல்லி முடியாது. அவனை நினைக்கும் போதெல்லாம் என் மனமும் தேகமும் கட்டுவிட்டு நெகிழ்ந்து உருகிப் போகின்றன. அவன் விஷயத்தில் நான் அவ்வளவு அபார மான பிரேமை வைத்திருந்தும், நான் என்னுடைய பதற்ற குணத் தினாலும் என்னுடைய கற்பைப்பற்றி பிறர் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்ற பயத்தினாலும், அவன் பேரில் அபாண்டமான அவதூறைச் சொல்லிவிட்டேன். அந்த வதையே இப்படி வந்து என்னுடைய குடும்பத்தைப் பிடித்துக் கொண்டு சீர்குலைக்கிறது. ஆகையால், நீ சொல்லும் துன்மார்க்கங்களில் இறங்க எனக்கு இஷ்டமில்லை. இப்படிப்பட்ட துஷ்டக்காரியங்களில் உன் மனம் செல்லும்படி நீ விடுவாயானால், நான் உன்னை இனி என் பக்கத்திலேயே சேர்க்கமாட்டேன். நான் கண்டித்துச் சொல்லுகிறேன். எனக்குத் தெரியாமல், நீ இந்த மதன கோபாலனுக்கு ஏதாவது தீம்பு நினைக்கப் போகிறாய்; ஜாக்கிரதைஎன்று மிகவும் கண்டிப்பாகவும் கடுமையாகவும் கூறிப் பொன்னம் மாளை வெளியே அனுப்பினாள்.
அதன் பிறகு கல்யாணியம்மாள் அன்றிரவு முழுதும் பசி, தாகம், துக்கம், சிரமம் முதலிய எதையும் பொருட்படுத்தாமல், அதே கவலையாகப் படுத்திருந்து, அந்தப் பெருந் துன்பத்தில் இருந்து தான் எப்படித் தப்புவதென்று நினைத்து வேதனைக் கடலிலாழ்ந் தும், இடையிடையே மைனரது துன்மார்க்கச் செயல்களைப் பற்றியும், துரைஸானியம்மாளால் ஏற்பட்ட அவமானத்தைப் பற்றியும் சிந்தித்தும் விசனித்தும், அவர்களால் தனக்கு இனி மேலும் என்னென்ன தீம்புகளும், அவமானமும் இழிவும் உண்டாகுமோ என்று கவலையுற்றும் நரக வேதனையில் ஆழ்ந்து
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/86
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
