வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83
கிடந்தாள். அதற்கு முந்திய நாளிரவில் அடையாற்று பங்களாவில் அவள் பட்ட பாட்டைவிட இந்த இரவில் பன்மடங்கு அதிகமான கலவரக் கடலில் அவள் மூழ்கியிருந்தாள். அந்தக் கொடிய இரவும் கழிநதது; கல்யாணியம்மாள் மிகவும் மெலிந்து தளர்ந்திருந்தமை யால் தனது சயனத்திலிருந்து தட்டித் தடுமாறி எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு உடனே, தனது பெட்டி வண்டியைப் பூட்டச் செய்து, பொன்னம்மாளோடு அதற்குள் உட்கார்ந்து கொண்டு வண்டியை கோமளேசுவரன் பேட்டைக்கு ஒட்டச் செய்தாள்.
அவ்வாறு சென்ற பெட்டிவண்டி அரை நாழிகை நேரம் கோமளேசுவரன் பேட்டை நாகப்ப முதலி தெருவிலிருந்த சுந்தர விலாஸ் என்னும் மெத்தை வீட்டின் வாசலில் போய் நின்றது. வேலைக்காரப் பொன்னம்மா அந்த வீட்டிற்குள் போனாள். அந்த வீட்டின் சொந்தக்காரா அப்போது தான் அங்கே வந்து சில வேலைக்காரர்களை விட்டு வீட்டுக்குள் சுவர்களுக்கு வெள்ளை யடித்துக் கொண்டிருந்தார். பொன்னம்மாள் அவரைக் கண்டு அந்த வீட்டிலிருந்த வீணை வித்துவானான மதனகோபாலன் இருக்கிறானா என்று கேடக, அவன் அந்த வீட்டை காலி செய்துவிட்டு இரண்டு நாட்களுக்கு முன் மைலாப்பூர் கடற்கரையில் உள்ள மனோகர விலாஸ் என்னும் பங்களாவிற்கு இடம் மாற்றிக் கொண்டு போய்விடடதாக அந்த வீட்டின் சொந்தக்காரர் சொல்ல, அதை கேட்டுக் கொண்டே பொனனம்மாள் வெளியே போய் வண்டிக்குள் ஏறிக்கொண்டு, மைலாப்பூர் கடற்கரைக்கு ஒட்டும்படி உத்தரவு செய்துவிட்டு தான் அங்கு அறிந்து வந்த விவரத்தைக் கல்யாணி யம்மாளிடத்தில் கூறினாள். வண்டி உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு மைலாப்பூரை நோக்கிச் சென்று அரை நாழிகை நேரத்தில் கடற்கரையை அடைந்தது. வண்டிக்காரன் மனோகர விலாஸம் என்ற பங்களா எங்கே இருக்கிறதென்று விசாரித்த வண்ணம் வண்டியை ஒட்டிக் கொண்டு போய் சற்று துரத்தில் கடற்கரையின் மேலிருந்த அந்த பங்களாவைக் கண்டுபிடித்து அதன் வாசலில் வண்டியை நிறுத்தினான். பொன்னம்மாள் கீழே இறங்கி அந்த பங்களாவிற்குள நுழைந்தாள். பெட்டி வண்டியின் ஜன்னற் பலகைகளின் இடைவெளிால் அந்த பங்களாவை
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/87
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
