84 மதன கல்யாணி
நோக்கிய கல்யாணியம்மாள் வியப்பும் திகைப்பும் அடைந்தாள். ஒரு மகாராஜாவினது அரண் மனை போல இருந்த மகா உன்னதமான அந்த மாளிகையில், கேவலம் ஏழையான மதன கோபாலன் இருக்கிறான் என்பதை அவளது மனம் நம்பவே யில்லை. அந்த இடத்தில் யாராகிலும் மகாராஜா இருக்க வேண்டும் என்றும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்த எவருக்காவது வீணை பயிற்றிவைக்கும் பொருட்டு மதனகோபாலன் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவன் குடியிருப்பதற்கும் அந்த பங்களாவில் ஏதாவது ஒரு பக்கத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும என்றும் அந்த அம்மாள நினைத்துக் கொண்டாள்.
"ஆகா! நான் இவனுடைய பிழைப்பைக் கெடுத்து இவன் தொழில் செய்து வந்த இடங்களை எல்லாம் இழக்குமபடி செய்தேனே! அதனால் இவனுககு என்ன குறை ஏற்பட்டது? கோமளேசுவரன் பேட்டையில் ஒரு சாதாரணமான வீடடில் இருந்தவன் இப்போது ஒரு மகாராஜன் இருக்கத்தக்க அரண்மனை யில் இருக்கிறான்; முன்னைவிட இன்னமும் அதிகப் பெருமை வாய்ந்த யாரோ ஒரு தனிகரால் அபிமானிக்கப் பட்டிருக்கிறான். நானோ துன்பங்களை அனுபவித்தவளாய்த் தற்கொலை செய்து கொள்ள வழி தேடிக் கொண்டிருக்கிறேன். மனிதரை மனிதர் கெடுத்து விடுவது அவ்வளவு சுலபமான காரியம் ஆனால், இநத உலகம் கால் நிமிஷ நேரம் நிலைத்து நிற்குமா? இந்த பங்களாவைப் பார்த்து என்னுடைய பங்களாவையும் பார்த்தால், அதைக் கேவலம் ஒட்டன் தொமபனுடைய குடிசைக்கே சமானமாகச் சொல்ல வேண்டும். மதனகோபாலன் தன்னுடைய குணங்களி னாலும், அபாரமான வித்தை விசேஷத்தாலும் எங்கே போனாலும் சிறந்து விளங்குவான் என்பதற்குத் தடையே இல்லை; கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பென்பது பொய்யாகுமா?" என்று அவள் தனக்குத் தானே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்தச் சீமாட்டி அவ்வாறிருக்க, வண்டியை விட்டிறங்கி பங்களா விற்குள் நுழைந்த பொன்னம்மாள் அதற்குள் முன் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வேலைக்காரனைக் கண்டு, மதன கோபாலன் என்ற வீணை வித்துவான் இருக்கிறானா என்று
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/88
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
